பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜகுமாரி 177

விவரம் தெரியா விசனம் அவள் மேல் படர்கிறது.

அதன் பாகு விழியோரங்களில், உதட்டின் வளைவில், மோவாய் குழிவில், முதுகுத் தண்டில், மார்பின் பூண்களில், தொப்புள் சுழியில், இடுப்பின் நெகிழ்வில், அடிவயிற்றின் மேடில், மேடின் இறக்கத்தில் சுற்றிக் கொள்கிறது. அதனால் உடலில் ஒரு மதப்பு. பூமியைத் தன் மதுவை ஏந்தும் ஒரு மலர்க் கிண்ணமாக இரவு மாற்றிக்கொண்டிருக்கிறது. விசன நரம்புகள், ஒடிய இதழ்கள் பகல் விரிந்து, இரவு குவிந்த பூவுள் மாட்டிக் கொண்டு மதுவில் நீந்தித்தவிக்கும் உயிரெனும் பரம சோகத்தின் மின் மினிகள்.

இங்கிருந்து தெரியும் வீட்டின் உட்புறம், கூடத்தில் ஏற்றி வைத்த குத்துவிளக்கின் இளவெளிச்சத்தில் குளித்து, மணவறையில், கன்னத்தில் படரும் நாணத்திட்டுபோல் தோன்றுகிறது. ஆயுசில் பாதியாச்சு. அடராமா, அசட்டு பிசட்டுன்னு என்னென்னவோ மனசில் தோணிண்டிருக்க்ே.

'இதென்ன வீடா இல்லை...... என் வாயில் வரக் கூடாததெல்லாம் வறது; அதுவா இது ?”

நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய கோணி ஊசியின் கூரில் குரல் இருளைத் துருவி வந்து அவளை எட்டிச் சுடுகிறது. மனமிலாது நினைவைக் கலைத்து உள்ளே செல்கிறாள். அவளைக் கண்டதும் வெடித்த விதைபோல் கிழவர் குதிக்கிறார். அவர் கோபம் பார்க்க ஒருபக்கம் பயம். ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இந்த வீட்டுப் பெண் களுக்கு ஆணவம் முத்திப் போறதுக்கும் ஒரு எல்லை யில்லையா என்ன? நாள்தான் அஸ்தமனமாச்சு. வீடே அஸ்தமனமாயிடுத்தா?”

என்ன தாத்தா அம்மாவைக் கோவிச்சுக்கறே?” "ஒ அந்த அளவுக்குக் கட்டை உரம் ஏறிடுத்தா?” த்வனி-12