பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜகுமாரி . 179

யார் அவள் காலைக்கட்டறது? கீழே நோக்குகிறாள். "தாத்தா என்னை அடிச் சுட்டட்-டாம்-மா! 'ഉണ്ണം ഉജ്ജ്ജ'

நான் பெற்றதுதான் நீ. ஆனால் இன்னிக்கு எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. காரணம் கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. யார் என்னை என்ன திட்டினாலும் இன்னிக்கு எனக்கு ஒட்டிக்கல்லே. காரணம் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது.

இன்னிக்கு உனக்கு எதில்தான் அக்கரை! இன்னிக்கு எதுதான் உன்மேல் ஒட்டிக்கொள்ளும்?

அவளிடமிருந்தே எழுந்த கேள்விக்கு மோனப் பதிவில் கண்முன் செவிேலென மார்பின் தோற்றம் எழுந்தது மார்க்குலையில் ஸ்ன்னமான ஸ்படிக ஜபமணி மாலையின் இறக்கம்.

தன் கணவன் முகத்தை உடனே, அந்த நிமிடமே பார்க்க வேணும், பார்த்தேயாகனும் எனும் அவா. விலங்குத் தன் இரையைக் கவ்வுவதுபோல் அவளைக் கவ்விற்று.

'இதென்னடியம்மா திடீர்னு உலாவப் போயிருப் பவர் திரும்பி வருவதற்குள் வருடக் கணக்கில் பிரிந்தாற் போல் ஏக்கம்?

அவள் ராஜகுமாரி, அவளுள் அவளே தோழி. ராஜ குமாரியை பரிஹாசம் செய்கிறார். ஆனால் கரை புரண்ட இந்தப் பிரிவாற்றாமைப் பெருக்கில் பரிஹாசம் ஏற்க வில்லை. இன்று மாலை மயக்கத்தில் நிமிடங்கள் வருடங்களாய் நீண்டு விட்ட அற்புதம். இது என்ன ?

அந்த அற்புதமும் ஏக்கமும் கலையாமலே, லாந்தர் களை ஏற்ற ஆரம்பித்தாள். ஆயிரம் லாந்தர்கள் ஏற்றி வைத்தாலும் இன்றைய இருள் என்னிருள் தனி இருளில் இவரே செந்தழல் கொஞ்ச காலம்ாகவே உடம்பு