பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜகுமாரி i81

'நானே விட்ட வெள்ளைப் புறா !”

திரும்பத் திரும்ப கொக்கரிக்கிறாள். அவளுக்கு அது ஒரு பெரிய வேடிக்கையாயிருக்கிறது. அதோ பார் உன் முதுகில்!'

'நானே விட்ட வெள்ளைப் புறா.”

“நானே விட்ட வெள்ளப் புறா !”

தாத்தா இடது கையால் அவள் முதுகில் 'பளார்”

என்று அறைகிறார். சப்தம் பட்டாசு வெடிக்கிறது.

சுப்புவுக்கு சிரிப்பு தாங்கவே முடியவில்லை. உடலே குமுங்கி மடிகிறது. -

"ஏடி சுரனை கெட்ட வெள்ளாட்டி" இப்போ வலிக்கல்வியோ? அப்போ வாயை கப்பறையாப்பிளந்து ஊரை கூட்டினையே t' போ தாத்தா ! இது ஆசையடி வலிக்குமோ?’’

கிழவர் இடது கையால் பேத்தியை அனைத்துக் கொள்கிறார். கள்ளி கள்ளி இப்பவே பேச்சிலே மயக்கபார் "அவர் கண்கள் துளும்புகின்றன.

திடுக்கென விழிப்பு வந்தது. அவளை அப்படி எழுப்பியது எது? பொத்தென்று அவள்மேல் விழுந்தடித்து பல்லி ஒடித்தா ? சமயலறையில் சாமான் உருண்டதா ? ஊஞ்சல் சங்கிலியின் கிறீச்சா o

அத்தைக்குப்பின் ஊஞ்சலுக்கு அவள்தான் வாரிசு நாளெல்லாம் பாடில் சலித்த உடம்புக்கு அதன் லேசான அசைவின் இதவு இருக்கட்டும் ஒரு பக்கம். அதிலும் பெரிசு அத்தை படுத்த இடம் என்கிற மவுசு, அத்தை புரண்ட இடத்தில் தானும் புர ண் டு அத்தையின் கைரியத்தை, பலத்தை அத்தை புழங்கிய பொருளிலிருந்து அத்தையின் பிரசாதமாய்த் தானும் பெறுவதாய் ஒரு த்யானம் , த்யாணமேதான் தைரியம் , த்யாேைமதான்

பலம்.