பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 82 லா. ச. ராமாமிருதம்

ஆனால் அவளை எழுப்பியது அவள் நினைத்ததல்ல. எங்கிருந்தோ அதென்ன சொட்டு' :சொட்டு”...? முக்காலி மேல் நிறுத்தி இருக்கும் தீர்த்த சால் ஒழுக்கலா ? அடியில் கவிழ்த்த பால் உருளிமேல் ஜலம் :சொட்டு' :சொட்டு சொட்டு'

-இல்லை ஜலத்தைவிட இந்த ஓசை கல்கண்டு மாடியி லிருந்து துளிக்கின்றது. துளிக்குத் துளி தனித்தனி தெறித்து ஒன்றுடன் ஒன்று இழைந்த பாகு உள் ஊறி அவளையும் தன்னோடு கட்டியிழுக்கையில் அதுவே வேதனை விடு துதாகி சொட்டு சொட்டு” சொட்டு"

-திடீரெனப் புரியவில்லை உடல் பூரா ஒரே தவிப்பு, விழியோரங்களில், உதட்டு வளைவில்,மோவாய்க்குழிவில், முதுகுத் தண்டில், மார்பின் பூண்களில், தொப்புள் சுழியில், இடுப்பின் நெகிழ்வில், அடிவயிற்றின் மேடில், மேட்டின் இறக்கத்தில், அனல் சரடு சுற்றிக்கொண்டது. பிய்த்தெறிய முயன்றதும் சரடு சிக்காகி அங்கங்கள் திகு திகுவென பற்றிக் கொண்டன. மானம் போக காலை வாரிவிடும் மோசடி மூட்டம். ஈதென்ன ?

ஊஞ்சலிலிருந்து எழுந்து புவி புறப்பட்டது. தன் ஒசையே தனக்கு ஊமையாகி, தன் பசிக்கு இரைதேடும் சூதில் மெத்திட்டுவிட்ட பாதங்கள் அவளைக் கூடத்தி லிருந்து அடியடியாய் ஏந்திச் சென்றன.

மாடியடியில் ஒரு கணம் தயங்கி நின்றாள். இரவின் அமைதியில் புவனம் ஒரு பிரம்மாண்டமான குமிழியாய் அந்தரத்தில் தொங்கிற்று.

எப்பவோ சுப்பு தாத்தாவோடு திண்ணைக்குப் போயாயிற்று. பையன் குஞ்சுத் திண்ணையில் தூங்கு கிறான் இப்போதெல்லாம். அவனுக்கு தன்மேல் பிறர் உடம்போ கையோ தற்செயலாய் பட்டாலே பிடிக்க வில்லை. கொஞ்ச நாளாவே தனிக் கூடாகி விட்டான்.

தேனென ஒலித் துளிப்பு