பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜகுமாரி #33

பளிங்கெனத்துலங்கி

இங்லிகினிங்

பளிங் கிளிங்

தரங் கினிங்

கறவைக்கு ஏமாற்றிக் கன்றுக்கு மீத்து மடியில் மறைத்த கள்ள மணி, கன்றுக்குக் காத்திருந்து கன்றைக் காணாது தன்னை மறந்த பரிவின் துரிய மணி மடிமீறி காம்பினின்று சொட்டுச் சொட்டுச் சொட்டென தேம்பும் பாலின் துயரமணி.

ஓசை மணிகள் கிண்கிணிக்கும் வழியே சென்றாள்.

மொட்டை மாடிமீது வான் குடலை கவிழ்ந்து உருண்டது. ஆனால் அதனின்று கொட்டியவை நட்சத் திரங்கள், பூக்களல்ல. அனைத்தும் முள் கொண்டைகள் வானத்தில்-அல்ல புடவையில்-அல்ல-உடலில் தை தை தைத்து அடிவரை பாய்ந்து ஆங்காங்கே திருகிப் பதிந்து சுடர் விடும் குருர எக்களிப்புக்கு அஞ்சி உடல் குலுங்கி ரோமம் சிலிர்த்தது.

ஆனால் அந்த வலி முழு உணர்வையடைந்து உள் அழுந்துமுன், மாடியறையின், ஒருக்களித்த கதவின் பின்னாலிருந்து திடீரென நாத ஜாதிகள் புறப்பட்டுவந்து

அவளை மொய்த்துக் கொண்டன.

முக்குக் குத்தியில், நெற்றிக் குங்குமத்தில், காதுக் கம்மல் கற்களில், நெற்றி நடு வகிடில், மேல் உதட்டில் துளித்த வேர்வை முத்தில், மோவாயடியில் ஒளிந்த பிறவி மறுவில், உள்ளங்கை ரேகைகளில், கண்ரப்பை பயிரில், பிடர் மயிர்ச் சுருளில், நகச் சதையிடுக்கில்,புருவக வானில், கூட்டங் கூட்டமாய் குழுவான்கள் சிட்டஞ் சிறகுகளில் பறந்து வந்து தொத்திக் கொண்டன. அவைகளின் எள்ளளவுக்கெதிர்மாவின் அரும்பும், புளியத் தளிரும்