பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் ஒரு தோலா னால் மனமும் உடல்தான். உலகமே உயிரின் கல்லறை. என்மேல் கற்கள் அடுக்கியாகின்றன. நான் தனியனர்கிவிட்டேன். - நாளும் கிழமையும் என்னைத் துறந்தன.

மறுநாள் மாலை: ராஜு ஆபீசுக்கு வந்தான், விஜியைத் தூக்கிக்கொண்டு.

"அப்பா!' குழந்தை என்னைக் கண்டதும் ஒரு தாவு தாவிவிட்டாள். அப்பம் போன்ற கைகளால் என் முகத்தைத் தொட்டுப்பார்க்கிறாள். அது அவள் சுபாவம்.

நான் மணியடித்து, பாபுவை ஒரு 'ஸ்ெட் டியனும்’

இரண்டு காப்பியும் வாங்கிவரச் சொன்னேன். விஜிக்கு ஒரு லாலி பாப்!

அப்படியென்றால் என்னவோ ?

ராஜுக்கு முகம் சுண்டியிருந்தது. -

'அப்பா என்னை மன்னிச்சிடுங்கோ !” இந்த மூன்று வார்த்தைகளை வெளியிட எவ்வளவு ஒத்திகை பார்த் திருப்பான்.

'ஒ ராஜூ i am also sorry. உன் அம்மா சொன்னாப் போல, உன்மேல் நான் ஏன் கை வைத்திருக்க வேணும்? நான் பெற்றதால் என் வளர்ப்பிலேயே உன்னை நான் உருவாக்கப் பார்ப்பது நியாயமா? ராஜு நீ பெரியவனா யிட்டே. உன்னிடம் விட்டுப் பேசலாம் என்றே நினைக்கிறேன். இந்த மனித விதைக்குத்தான் இந்த மகத்துவம் உண்டு. ஒரேமரத்தில் மாங்காய் காய்க்கும், தேங்காய் பாளைவிடும், அவரை பூக்கும், பாகல் படரும். இந்த உண்மை சமயத்தில் மறந்து விடுவதால்தான் வருகிறது துயரம், சண்டை, மன ஸ்தாபம் எல்லாம்!" . . . . .

'வீட்டுக்கு வாங்கோ அப்பா!” ராஜூ முனகினான். சேகர் இந்த ஒருநாள் ராத்திரியில் உங்களைக்காணாமல்