பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 லா. ச. ராமாமிருதம்

வீட்டுக்கு அவரை நான் அழைக்கனுமா என்ன? நாலு பேர் சிரிக்கணும்னுதானே நாலு பெக்கற வரைக்கும் காத்திருந்து உங்கப்பா லீலை நடத்தறார்!" -

அதுவும் எனக்குத் தெரியாது. இப்போதைக்கு என் சிரிப்புத்தான் எனக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. குழந்தைகள் வருமுன், என் ராதை ஒரு சமயம் எங்கள் ஆலிங்கனத்தின் நெருக்கத்தைத் தடுத்ததென என். பூனுலைக் கோபித்து சூள்' கொட்டி முதுகப்புறம் தள்ளிவிட்டதும் ஞாபகம் வருகிறது.

இன்று மாலை லாட்ஜ் வாசலில் வந்து தெருப்பக்கம் காற்று வாங்க நின்றேன். எதிர் வீட்டுக் குறட்டில் ஒரு பையன் பம்பரம் ஆடுகிறான். இல்லை ஆடப் பார்க். கிறான். சின்னப் பையன் நாலு, ஐந்து வயதுக்குமேல் இராது. கயிற்றை இழுத்துப் பம்பரத்தில் சுற்றக்கூட அவனுக்குச் சக்தியில்லை. அவனிடம் போய் கையை நீட்டினேன். பையன் முறுக்கிக் கொள்ளவில்லை. உடனே கொடுத்துவிட்டான். ஜாட்டியைச் சுற்றிக் கொண்டே 'அம்பி உன்பேர் என்ன?" என்று கேட்டேன்.

சேகர்.' "ஓ! நீயும் சேகரா?" பம்பரம் கயிற்றிலிருந்து விடுபட்டு ரோஷத்துடன் தரைமீது குதித்தது. குளவிபோல் கூவிற்று கற்பூரக் கொழுந்து போல் துங்கிற்று. பையன் முகமே கண் களாயின. ஏற்கெனவே கார்ட்டுன் பொம்மை மாதிரிதான் இருக்கிறான். பம்பரத்தை எடுத்து அவன் கையை விரித்து உள்ளங்கையில் விட்டேன். குறுகுறு-சேகர் வாயிலிருந்து உடைந்த குழாய் போல் சிரிப்பு பீறிட்டது. பம்பரம் படிப்படியாக் வேகம் குறைந்து, கிழவன் தலைபோல் ஆடிக்கையிலிருந்து கவிழ்ந்தது.

தாத்தா தாத்தா துன்னொண்ணா தடவை பண்ணுங்கோளேன்! தாத்தா தாத்தா Please"