பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம்

罗尝

அவனைத் தூக்கிக்கொண்டேன். பையன் இறக்கை

மாதிரியிருந்தான்.

  • Thank you Sekar Tell your Mummy thank here ".

அவள் கணவனும் இரண்டு நாள் கழித்து என்னைப் பார்க்க வந்தான், பையனை அழைத்துக் கொண்டு. *சுமாச்சுமா சேகர் பிடுங்கி எடுக்கிறான். அவனுக்கு ராணுவத்தில் வேலை. நினைத்த சமயம் எங்கே வேணு மானாலும் மாற்றலாம். பையன் படிப்பு பாழாய்ப் போவுது. பையன் உங்க கிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான் சார், எங்களுக்கே ஆச்சரியமா இருக்குது.”

யாரும் என்னோடு ஒட்டினால் இப்போது கூச்சமா யிருக்கிறது. எந்தவித ஈடுபாட்டிலும் மாட்டிக்கொள்ள மனம் மருள்கின்றது. இப்போது ஒரு பெரும் ஈடுபாடிலி: ருந்து என்னைக் கழற்றிக் கொண்டு வந்திருக்கிறேன. ஆனால் இதை இவனிடம் சொல்ல முடியுமா ? சொல்வதே

ஒரு ஈடுபாடுதான். -

"அவளுக்கு ரொம்ப சந்தோஷம் சார், so to me: எங்க வீட்டில் பெரிய வங்க யாரும் இல்லை. என் parents சின்ன போதிலேயே காலமாயிட்டாங்க. அவளுக்குத் தாயார் இல்லை. அவள் தகப்பனார் மறு ப டி யு ம் கலியாணம் பண்ணிக்கிட்டார். அவங்க எல்லாம் துர தேசம்-”

கண்டவிடம் மாற்றலாகி, கண்டபேருடன் பழகி அவர்கள் பேச்சு இவனுக்குப் படிந்து, இவன் பாஷை இன்னதெனப் புரியாதபடி பாழ்பண்ணிக் கொண்டாச்சு. இதையெல்லாம் இவன் ஏன் என்னிடம் சொல்கிறான்? இவர்களைப் பற்றி எதையும் அறிய நான் விரும்பவில்லை. யாரைப் பற்றியும் எதையும் அறிய நான் விரும்பவில்லை. “உங்க மாதிரி ஒரு பெரியவங்க எதிர் வீட்டிலேயே எங்களுக்குக் கிடைச்சுது எங்க அதிர்ஷ்டம் ஸார், அப் * It'Guit effigor advice, guidence-”