பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

த்வனி 27.

என்மேல் ஊர்ந்த ஆயிரம் தேள்களில் ஒன்று அவ ரைக் கொட்டி விட்டாற்போல் அவர் துள்ளி எழுந்தார். சிவகாமி ஆள் வந்தாச்சு, இலையைப் போடு " அவர் குரல் கணிரென்றது. வாங்க, க்ைகால் கழுவுங்க!” வாழை இலையில் வட்டித்த சாதத்தின்மேல் நெய் ஊற்றிய இடம் லாந்தர் வெளிச்சத்தில் பளபளத்து என்னைப் பார்த்துச் சிரித்தது.

அந்த வற்றல் குழம்புக்கும், பருப்புத் துவையலுக்கும். கெட்டி மோருக்கும் இணை ருசி நான் இன்னும் கானப்போகிறேன்.

சாப்பாடு முடியும்வரை யாரும் பேசவில்லை.

கையலம்பிக் கொண்டதும் அவர் வெற்றிலைத் தட்டை யெடுத்து வந்தார்.

'நான் போடும் வழக்கமில்லை” என்றேன். 'பரவாயில்லை, தாம்பூலம் எடுத்துக்கோங்க.' நான் வாங்கிக் கொண்டதும் தடாலென்று இரு வரும் என் காலில் விழுந்து நமஸ்கரித்தனர்.

எனக்கு வாயடைத்தது. - அந்த அம்மா பேசினாள். "எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுங்களா? இன்னி மாலையிலிருந்தே இவர் சொல்லிட்டிருக்காரு. 'சிவகாமி, இலை போட அவசரமில்லை விருந்தாளி வர இருக்கு"ன்னு, என்ன இவரு இப்படிச் சொல்றாரே, நேரமாவுதே. நான் யோசனை பண்ணிட்டிருந்தேன் நீங்களும் வந்தீங்க, ஆனால் இவர்கிட்டே எனக்கு இது ஒண்ணும் அதிசயமில்லீங்க. இவரு இப்படி ஏதாவது சூசனையா சொல்வாரு சொல்றபடியே நடக்கும்."

இவர்களிடம் எனக்கு அச்சமாயிருந்தது. பேச்சை மாற் ற, 'குழந்தைகள் எல்லாரும் தூங்கி விட்டார்களா?” என்று கேட்டேன்.