பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 29

'ஏன் நான் கொடுத்து நீங்கள் வாங்கிக்கக்கூடாதா ?" இதற்கென்ன பதில் சொல்ல முடியும் ? தட்டை ஜன்னலில் வைத்துவிட்டுச் சென்றாள்.

இன்னொரு சமயம் தலைவலி உடல் சுகமில்லை, என்று தட்டிக் கழிக்க முயன்றேன். அவ்வளவுதான். ஏன் சொன்னேன் என்று ஆகி விட்டது. உடனே மாத்திரை, வெந்நீர், கஷாயம், மிளகுரசம் என்று எதை எதையோ துக்கிக் கொண்டு இருவருமே வந்து விட்டனர். அந்தப் பொய்யிலிருந்து கெளரவமாய்த் தப்புவதே பெரும் பாடாய்ப்போய்விட்டது.

சிறுமீன் போட்டுப் பெருமீன் பிடிக்கிறார்களோ என்று நான் கவலையுறும்படி அவர்கள் என்னிடம் கடன் கேட்கவில்லை. ஒரு தயவையும் எதிர்பார்க்கவில்லை. மனிதன் எப்பவும் சந்தேகப்ராணி. . ஒன்று இல்லாவிட்டால் ஒன்று ஏதோ ஒரு தாrண்யச் சுழியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம்.

ஒன்று ஆத்திரத்தில் அழிகிறோம் அல்லது அன்டால் கொலை செய்யப்படுகிறோம்.

இந்தத் தாrண்யங்களைத் திருப்புவது எப்படி என்று மண்டையைக் குடைந்து கொள்வேன்.

பையனுக்குப் பிஸ்கட் ரோல் வாங்கித் தருவேன். ஒரு வெள்ளிக்கிழமை மாலை கதம்பம் வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டுள் நுழைந்தேன்.

அவள் மட்டும்தான் இருந்தாள். அவள் கணவன் இன்னும் ஆபீஸிலிருந்து வரவில்லை. பையன் விளை யாடப்போய் விட்டான் போலும்.

வாங்கோ வாங்கோ ! ! ’’ பூப்பந்தை அவளிடம் நீட்டினேன். அவள் கண்கள் விரிந்தன. எனக்கா ?” -

பின்னே என்ன நான் சூட்டிக்கொள்ளவா ?” என்னிடமிருந்து வாங்கிக் கொள்கையில் அவள் கைச் சுண்டுவிரல் என் உள்ளங்கையில் பட்டது. உடல் பூரா