பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- லா. ச. ராமாமிருதம்

ஊடுருவிய ஒரு பரவசத்தில் என் விழிகள் பிதுங்கி என் கையில் விழுந்து விடும்போல் மண்டையில் ஒரு மின்னல். இரு கைகளையும் தாக்கிப் பூச்சரத்தைக் கொண்டை யில் சரிப்படுத்திக் கொண்டு அவள் நிற்கையில், ஜீராவில் செய்து வைத்த சின்னிப் பொம்மைபோல் எந்த நிமிஷம் கரைந்து விடுவாளோ, கடலில் கரையோரம் நடுங்கும் அலை துரை போல் சிதறிக் காணாமல் போய்விடுவாளோ என்றுகூட ஒருதினுசான வேதனை முதுகுத் தண்டில் ஏறி இறங்கி நெளிகின்றது. இவள் எப்படிப் போனால் எனக் கென்ன என்று ஏன் இருக்கமாட்டேன் என்கிறது ?

இன்று ராதை வந்தாள்.

மூன்று மாதங்களுக்குப்பின், முற்றிலும் எதிர்பாராத சமயத்தில், 'நான் வரலாமா?” என்று கேட்டுக் கொண்டே. திடீரென்று அவள் அப்படித் தோன்றியதும் அவளைப் பார்க்க, சினேக பாவனையில் அவளை வரவேற்க சந்தோஷமாய்க்கூட இருக்கிறது.

"என்ன அப்படிக் கேட்கிறாய்? வா, வா.”

"ஆமாம், நம் வீட்டில், நம் வீடாகையால் நம் வீடு என் வீடுகூட. ஆனால் இது உங்கள் இடமாச்சே! இங்கு அனுமதியில்லாமல் நுழையலாமா?”

அவசரமாய்த் தலையணைகளை உதறிவிட்டு ஜமக் காளத்தை விரித்தேன். உட்காருமுன் அவள் கண்கள் அறையின் நாற்புறத்தையும் துழாவின. அவள் மூக்கு நுனி சுருங்கிற்று. என்னையும் ஒருமுறை கண்ணோட்டம் விட்டாள். .

'ஐயாவுக்கு வெளிவாசம் ஒன்றும் வனவாசமா

யில்லை, உடம்பு சிவப்பிட்டிருக்கே!”

"நான் அப்போகறுப்பா என்ன?"

'ஓ' என் கறுப்பை நீங்கள் இப்படி ஞாபகப்படுத்தித் தானாகனுமோ?