பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 லா. ச. ராமாமிருதம்

வில்லையே இன்று காலை கைதட்டி கண்ணாடி டம்ளர் உடைந்துவிட்டது.) -

'மாமா நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். நீங்களும் வரேளா? கேட்க வந்தேன். வந்த இடத்தில் மாமியைக் கண்டேன்.'

"ஓ! மாமா இப்போ கோவிலுக்குக்கூடப் போறாரா, தேவலையே!”

'இல்லை, இதுவரை நாங்கள் அழைத்ததில்லை.” கலியாணியின் குரலில் ஏதோ நிழல் படர்ந்தது. ஏன் நீங்களும் வாங்கோளேன் எல்லோரும் போவோமே !

“எனக்கேது அம்மா அவ்வளவு கொடுப்பனை? மாமா அந்த நாளிலிருந்தே என்னை அழைச்சுண்டு போயிருந் தால் தாங்கள் இப்படியா இருப்போம் ! காசியிலிருந்து கதிர்காமம் வரை இதுவரை மூணு ரெளண்டு அடிச் சிருக்க மாட்டேனா காசிக்கும் எட்டின இடம் ஏதாவது இருக்கா? நீங்கள் சொல்லுங்களேன்!”

ஏன் இல்லை ? கைலாசமேயிருக்கிறதே ! ஆனால் அங்கு போனவர் திரும்பி வருவதில்லை” என்றேன். கலியாணி எங்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். "சரி, இன்னிக்கு உங்களுக்கு ஒழியாது என்று தெரிகிறது, நான் வருகிறேன்' என்று எழுந்தாள்.

எதிர் வீட்டுள் அவள் கட்டுள் அவள் மறையும் வரை ராதை அந்தத் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எத்தனை நாளாக இந்த ஸ்வீகாரம்?" 'எனக்குத் தெரியாது. நீ சொல்லித்தான் தெரியணும். அவள் பேரே இப்போத்தான் எனக்குத் தெரியும், அதுவும் உன் மூலமா...?”

'இது இன்னொரு stunt ஆக்கும்' திடீரென்று தலையிலடித்துக் கொண்டாள். 'ஐய, இந்த ஆண் களுடைய சபலமே ! -நன்னா நெற்றிக் கண்ணைத் இறலுங்கள். எனக்குப் பழகின கண் தானே! இப்படி யெல்லாம் செளகரியமாய் இருக்கணும்னுதானே இங்கு