பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 శ్రీ லா. ச. ராமாமிருதம்

"அம்மாவின் சொந்தப் பேர் ஒண்னு. ஆனால் அவள் தனக்கு வெச்சுண்ட பேர் வேறு ஏதோ, புது மாதிரி. அவள் பேர்-"

அவள் சொன்னது இஞ்சினின் பெருமூச்சில் கேட்க வில்லை. வண்டியுடன் நான் ஒடினேன்.

"உன் தாயார் பேர் என்ன? என்று கத்தினேன். அவளும் உரக்கக் கூவின்ாள்.

கலாசநாதனி.

அந்தத் தருணமே இஞ்சினின் ஊதல் காதைக் கிழித்துக்கொண்டு கிளம்பிற்று, செவிகளைப் பொத் திய படி நின்றவிடத்தில் நின்று விட்டேன். ரயில்' என்னைத் தாண்டி இருளில் மறைந்தது. .

இப்பொழுது புரிந்தது. இவளை முன்பின் பாராமலே இவளை எங்கோ பார்த்தாற்போல் இவள் நினைவு நெஞ்சில் இடறும் மர்மம். தாயின் குரலின் சாயை பெண்ணிற்கும் கொஞ்சம் அடித்தது.

ஸ்-நாதனி.

ஸ்டேஷ்ன் மாஸ்டரின் அறையில் டெலிபோன் மணி படித்தது.

ஆனால் அங்கு மட்டுமல்ல.

நினைவின் தேன் கூட்டில் வருடங்களின் மிதி காலடியில் புதைந்துபோன ஏதோ ஒரு பாதாள அறை யிலிருந்து மணி ஒலி கேட்கிறது.

ஸ்-நாதனி என்னைக் கூப்பிடுகிறாள்.

என் பேரிஷ்டம் என் அறையின் தனி விசேஷம் அதன் முழு இருட்டு. ஜன்னலின் பொருத்தம் காற்றுக்குப் பங்க மிலாது தெரு வெளிச்சம் துளிகூட உள் விழாது. என் உடலேனும் எனக்கிலாத நிலையை உயிரோடு இருள் மூலமேனும் பாவனையில் ருசிக்க என் அறை எனக்கு ஒரு வழி. .

இம்முறையில் இருளே உன்னை ஒரு வழியில் புரிந்து கொண்ட்து சரியோ என என்க்கு நீ ச்ொல்,