பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 33.

இல்லை. நீ சொல்லமாட்டாய், நான் எனக்குச் சொல்லிக் கொள்வதே நீ எனக்குச் சொல்வதுதான். நீ சொல்லமாட்டாய். இமையா உன் விழிகொண்ட உன் விலங்கு விழிப்புத்தான் உன் விளக்கம்.

அகன்ற சிறகுகளை விரித்து நீ என் மார்மேல் இறங்குவது உண்ர்கிறேன். உன் கழுகுக்கால்கன் என்னைக் கவ்வுகின்றன.பிற்கு என்னை எங்கு எடுத்துச்செல்கிறாய்? இச்சமயம் நான் உன் குஞ்சா? உன் இரையா? ஏன்ெனில் உன் குஞ்சும் உன் இரையும் உனக்கு ஒன்று. தான். எதையும் விழுங்குவது, உன் தன்மை, ஒன்று. என்பதே உன் ஒரே குண்ம்; ஆகையால் அருங்குணம்.

நீ என்னைத் தின்ற விளைவாய் தான் என்னை இழந்து உன் ஒன்றில் ஒன்றி ஒன்றானேன்.

ஆனால் ஒன்று: ---- என்னை நீ தின்றதும் உன் வயிற்றில் தங்கியிருந் தேனெனில் நீ என்னை ஜீரணித்திருப்பாய், அப்போது உனக்கு நான் இரையானேன் என்று பொருள் கண்ட்ேன். உன் வயிற்றில் தங்காது அங்கிருந்து நேரே உன் விழிக்கு வந்து அங்கு அமர்ந்து அண்டங்களை அகண்ட மாய் உன் வாயில் கல்வி, ஏந்திய வண்ணம் காக்கும் உன் காவலில் உன்னையும் தின்ற உன் குஞ்சானேன்.

இச்சமயம் உன்னோடு காலத்தையும் விழுங்கினேன். சென்று போனதற்கும் வந்து நிற்பதற்கும் வரப் போவதற்கும்.

இலக்கணமான அதனதன் சமயமுமாகும் அம்சம். நீயலால் எனக்கு ஏது தரும்? Love wou.

烹 அது அந்த நாள். ஆபீஸில் எனக்கென்று ஒரு அறை, திரும்பும் நாற்காலி, டென்னிஸ் கோர்ட் போன்ற மேசை, தனி டெலிபோன்-ஆபீஸர் பதவிக்கு உயர்ந்த புது முறுக்கு, இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை ஆட்டம் கொடுக்க நாள்.