பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一盏爱 லா. ச. ராமாமிருதம்

'நான் அந்தக் கட்டத்தை விரும்பவில்லை.”

ஏன்? “பார்த்த முகமே புளித்த முகம்தான்.” "நான் இன்னும் உன்னைப் பார்த்ததில்லையே "ஒரு தரம் பார்த்தாலும், பார்த்த பின், பார்த்த முகம் தானே! கண்டதைக் கண்டபின், அப்படிக் கண்ட தாலேயே அதைக் காணாத முன் கற்பனையில் விளங்கிக் கொண்டிருந்த அதன் கற்பு நிலை சிதைந்து விடுகிறது என்று சொல்வேன். ஆகையால் நீங்கள் என்னைப் பார்க்க நான் விடப்போவதில்லை."

"இது ஒரு அனாவசியமான சிண்டல் இல்லையா?”

* *

'உங்களுக்கு அப்படிப் படலாம். ஆனால் என் அரூபத்தை என்னால் இப்படித்தான் சாதிக்க முடியும்சரி இன்று இது போதும். நாளை பேசுவோம்.'

நான் படபடவெனத் தட்டினேன். ஆனால் தொடர்பு அறுந்தாகி விட்டது.

யார் இவள்?

நாளை பேசுவாளா?

இன்று மாலை நாலரை மணியிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. என் வேலைகளைச் சுருக்கவே முடித்துக் கொண்டு விட்டேன்.

இந்த முள் ஏன் நகர மாட்டேன் என்கிறது? அவள் டெலிபோன் பண்ணுகிறேன் என்று சொன்னால் பண்ணு வாள் என்று நிச்சயமா? அவசியமா? சீ எனக்கு ஏன் இந்த அல்ப ஆசை. இன்னும் பத்து நிமிடங்கள் ஆனதுமே

will get out. இன்றைக்கு நிச்சயமாய் குழந்தையைப்

போட்டோ எடுத்

டெலிபோன் மணியில் தனி கணிர். பதறி எடுத்தேன்.

“Hellor

'ஒ, நீயா? அவள் குரலைக் கேட்டதுமே எனக்கேன் இவ்வளவு மகிழ்ச்சி?