பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 墨*

இல்லை என்று தெளிய நேரம் பிடிக்கிறது. எங்கோ கடியாரத்தின் அலாரம். கண்ணைக் கசக்கிக்கொள்கிறேன். விழிகள் நனைந்: திருக்கின்றன.

宽 நான் கண் விழித்ததும் இவ்வுலகத்தை சிருஷ்டிக் கிறேன்.

நான் தாக்கத்தில் அயர்கையில், என் சிருஷ்டியாகிய இவ்வுலகம் என் இமைகளின் குவிப்புள் ஒடுங்கி விடுகின்றது.

சாவில் இவ்வுலகத்தை அழித்து, என் சடலத்தையும் கழற்றி விட்டு, பிரக்ஞையில் புகுந்து யோக நித்ரையில் ஆழ்ந்து விடுவேன்.

என் கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர் வாய்க் கவிந்த இருளின் முழுவே உனக்கு அஞ்சலி. உதயத்தின் முற்பொருள் நீ, உனக்கு அழிவில்லை.