பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வரிகள்

இன்று ஒருவன் நகையைத் திருப்ப வந்தான். ஓ, மறந்தேன். இது இந்தப் பக்கத்துப் பாஷை, நகை மேல் வாங்கிய கடனை அடைத்துவிட்டு நகையைத் திரும்பப் பெற. நான் இங்கு வந்து நாளாகவில்லை. இன்னமும் இங்கு பழகிக்கொண்டிருக்கிறேன்-பாஷை, இடம், சூழ்நிலை, மனிதர்கள் உள்பட.

ஆள் முகத்தின் சோகம் புரியவில்லை. நானும் கேட்க வில்லை. கேட்பதில்லை. சுபாவமே அதுதானோ அல்லது இந்த ஊரின் மிதமான சீதோஷ்ண நிலையின் தூங்கு மூஞ்சித்தனம்தானோ என்று நினைத்துக் கொண்டேன். கீழே பேழையறையிலிருந்து அவன் நகைப் பெட்டியைக் கண்டெடுத்து மணிக்கூண்டு ஏறுவது போன்ற மாடிப்படியேறிட , திணறல்கூட அடங்கவில்லை, பெட்டியைத் திறந்த பின்தான் தெரிந்தது; ஆள் பார்க்க, பங்கியடித்தவன் மாதிரி இருந்தாலும், என் எதிரில் உட்கார மறுத்தாலும் புள்ளி புள்ளிதான்.

கல்லு கல்லா நான் குவடப் பட்டைச் சங்கிலி 3, வளையங்கள் (கெட்டி) ஜோடி 5, கல் பதித்த பதக்கத் துடன் அட்டியல் 1 (ஒரு நீல மாம்பழக் கதுப்பு அகலம்) ஒட்டியானம் 1-இடுப்பா அது இந்த அளவில், இந்த அகலத்தில் அது ஒரு கேலிக் கூத்துத்தான் இந்த நாளில் இந்தக் கனத்தில் தங்க நகை காணவும் முடியாது. அணிந் தாலும் உடலுக்குச் சுமைதான்

அடமானம் வைக்கத்தான் சரி. ஒரு க்ணம் ப்ரமித்துவிட்டு, இந்த திகைப்பு உண்மை பாயிருந்தாலும் எதிராளியைச் சந்தோஷப்படுத்துவதற்கு இதுவும் ஒரு வழிதான். என் உத்தியோகத்தில், எப்படி