பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரிகள் 器瑟 வைக்குது. ஒரு மிளகாய்ச் செடியிலே அறுத்தாலும் போச்சு, ஒரு வேர்க்கடலையிலே தோண்டினாலும் போச்சு, இருவது என்ன, மேலும்தான் போவட்டுமே! மேலும்தான் போச்சு! நல்லாத்தான் போச்சு நிறையத் தான் போச்சு. போய் என்ன? நிலைகுத்திப் போன கண்ணை நானேதான் மூடினேன். ஆனால் கண்கண்டு வழிஞ்சு இந்த உலகம் பூரா வழியும் அவள் துயரத்தை மூட முடியல்லேங்களே! முடியல்லேங்களே! அவள் குழந்தைங்கள் மூணு பேர் பொம்மையும் அவள் கண் பாப்பாவுலே கடைசிக் கரையாத் தேஞ்சு போச்சே. அதை யாராலே அழிக்க முடியும்? அந்த யமனாலே அழிக்க முடியுமா? சுட்டுப் பொசுக்கின சாம்பரா அது மாத்திரம் ஆயிட முடியுமா?”

வருத்தம் தரும் பல ஹீனத்தில் கம்பியாய்ப் போய் விட்ட குரல்.

சுவரில் காலண்டர் தாள்கள் காற்றில் படபடவென அடித்துக்கொண்டன. மணியடிக்கும் தறுவாயில் சுவர்க் கடியாரம் கர்ர்ர்'ரெணறு உறுமிவிட்டு மணியடிக்க மறந்து போயிற்று.

'உப்பே-ய்”-தெருவில் உப்பு வண்டிக்காரன் கத்திக் கொண்டே போனான். -

என் வாயுள் என்னையறியாமல் கடித்துக்கொண்ட நாக்கில் கசிந்த ரத்தம் கசித்தது.

அறைக்கு வெளியே மொட்டை மாடியில் பக்கத்து வளைவுகளிலிருந்து ஒங்கும் தென்னை மரங்கள் பெரு மூச்சாடின.

"என்ன செய்வதுங்க? போனவ திரும்பி வரப் போறாளா? இனி நானே அவளைப் போய்க் கண்டால் தான் உண்டு. அங்கேயும் அவள் கண்ணில் பட்டால் தான் உண்டு. அதுக்குள்ளேயும் எங்கே பிறந்துடறாளோ?” ஆச்சு இந்த ஆனி 12-க்கு நாள் குறிச்சாச்சு. மாத்துக் காலுக்கு மறுகாலா என் இளைய பொண்ணை, மரும்விப்