பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தீபக்

'யாரது ? இன்னிக்கு ஜோலி-ஐயோ சாமியா? இயா 6375. மன்னிச்சுக்கிடுங்க. ஏட்டுலேருந்து தலை நிமிரல்லே. யாருன்னு கவனிக்கல்லே. பாயிலே குந்தா தீங்க. வேணாம், வேணாம். சோபாவுல அமருங்களே துரை, ஐயாவுக்கு இடம் விடுலே ! ஐயாவை தெரியுமா டெய்-தெரியாது ? ஏசண்டு ஐயாடா ஒ நீங்க இங்கே மாத்தலாயி மாசம் நாலாயும் இந்தப் பக்கம் வல்லெல்லா ? அதான் காளிக்குக் கவனமா வல்லே. இப்பவாச்சும் ஐயாவுக்கு நெனப்பு வந்துருச்சே, சந்தோசம். காளியும் உங்களுக்கு எப்படித் தெரியும் ? முதலாளி மவங்க. நீங் களும் காளியை மன்னிச்சுக்கிடணும். சின்னவங்க பெரிய வங்க மருவாதை சொல்லிக் கொடுத்தாத்தானே தெரியும்: எப்படியும் முதலாளி மவனில்லே ? முதலாளியைக் காட்டி யும் இந்த காலத்துக்கு முதலாளி மவன்தான் துரை. நாளாக ஆக உரைகல்லுலே முதலாளியை மிஞ்சிடுவான். அப்படித்தானே இருக்கனும் காளி கணக்கப்புள்ளைக்குக் காவல். ஏலே நானும் பேசிக்கிட்டு இருக்கேன் நீயும் பாத்துக்கிட்டு நிக்கே ? ஐயாவுக்கு ஒரு பாண்டா' வாங்கி வா. கண்ணுல்லே ? காளி ரொம்ப நல்ல பையன்.

வந்தவுடனே சாமி வந்த காரியம் என்னான்னு நான் என் வாயாலே கேட்கக் கூடாது. கேக்க மாட்டேன். ஏன் கேக்கனும் ? ஐயா வந்தது எங்க பேரேட்டைப் பாக்கத்தானே ? நீங்க வர் ரப்போ நான் கண்ணைக் கவிச் சுக்கிட்டிருந்தேனே அதைப் பாக்காதீங்க. அதைக் கண் ணுல கூடக் காட்டக் கூடாது. அது எங்க சத்யம் ; அரிச்சந்திரன் கட்டின தாலி. இந்தக் கச்சாக்காட்டுலே கரடி, சிங்கம், புலி எல்லாம் நடமாடும். காடு முதலாளிது. கரடி, புலி கணக்கப்புள்ளைது. கணக்கப்புள்ளையை கரடி கட்டினா என்ன ? புலி தின்னா என்ன ?