பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபக் 55

அலங்க இங்கே புளைக்க வ ந் த வங்க . நாம இங்கேயே பிறந்து வளந்தும் அவங்ககிட்டே புளைக்கற வங்க. ஒவ்வொருத்தன் உலகமே பிறத்தியான் எழும்பு, மேலே எழுப்பின கட்டடந்தானே! ஐயா மன்னிச்சுக்கிட ணும். நான் வயசாளி, சாக்கடை, ஏதேதோ எனக்கே பேசிக்கிட்டேன். இதோ இளுத்து மூடிட்டேன். அதெல் லாம் ஐயா கண்டுக்காதீங்க. பாங்குக்குத் தனிப்புள்ளி வச்சிருக்கோம். அதை எடுத்துக் காட்டிடறேன்.

என்ன சிரிக்கிறீஹ? சாமி சிரிச்சுது என் மனது மலர்ந்தது. இதோ காளி வந்துட்டான். என்ன தம்பி பாண்டா' வாங்கி வரச்சொன்னா கோலா கொண்டு வந்துருக்கே? அதுவும் கோலி! என்ன, கடையிலே பாண்டா தீர்ந்து போச்சா? இந்த ஊர்லே உனக்கு சோடாக் கடையே ஒண்ணுதானா, பாண்டா இல்லாத கடையாப் பாத்து...? என்னா சொன்னேன் சாமி. பாத்தீங்களா பையனை! அப்பன் மாகாணியிலே மரமா காய்ச்சா, மகன் முந்திரியிலே முத்துக் குளிக்கிறான். இதெல்லாம் சொல்லியா வருது? பரம்பரையா ர்த்தத்துலே ஊறின தில்லே! என்ன முதலாளி உன்பக்கம் பேசுதேன்னு பாக் கயா? போய் கோலியை மாத்திவாடா! சரி சரி. அதையே கொண்டா. ஐயாவுக்கு கூல்டிங்கே ஆவாதாம். ஆவா துக்கு எதுவான்ா என்ன? கடை காப்பி குடிக்க மாட்டாரு. கடுக்காக்கஷாயம்,பாரு ஐயா கேக்கறாரு பாரு:கணக்கப் பிள்ளைவாள் உங்ககடையிலேகலர்குடிக்கவா வந்தேன்"னு உனக்கு காது கேக்கல்லே? நேக்கு கேக்கு. நேக்கு சொல் லாததும் நல்லா கேக்கும். சொன்னாத்தான் சொல்லா? ஐயா கண்டிப்பா கலர் குடிக்க வல்லே. நமக்கு தெரியாதா? ஐயா ஈட்டுக்கடை பேரமும் இல்லை. நமக்குத் தெரியாதா? ஆனா எங்க கடை மரியாதை, என்ன ஆவறது ? பச்சைத் தண்ணியைப் பச்சையா குடுக்கறதா ? சாயம் கொஞ்சமாச் சும் தோயனுமிள்ளா ! பரவாயில்லே. கோலியானாலும் துரை எப்படி கக்குது பாக்கையளா ? சும்மா சாப்பிடுங் கன்னா. உடம்புக்கு ஒண்னும் பண்ணாது. கியாஸ் ஏகமா அடைச்சு வெச்சுருக்கான். என்ன அதுக்குள்ளேயும்