பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尋

§ லா. ச. ராமாமிருதம்

ளுந்துட்டீஹ ? அவசரமென்ன, குந்துங்க. ஓ ! நம் ம இடம் சுத்திப் பாக்கனுமோ ? அதைவிட சந்தோசம் எங்க ளுக்கு என்ன ? இதோ ஒரு நிமிடம் பொதுங்க. கல்லா வைப் பூட்டிக்கிறேன். எலே காளி நான் வர வரைக்கி வாசல்லே கண்ணாயிரு. சோபாவுல மல்லாந்திடாதே.

o

ளு

ஐயா இந்தப் பக்கமா வாங்க கொஞ்சம் இருட்டுத் தான். இந்த வியாபாரத்துக்கு வெளிச்சம் ஒவ்வாது. அதி லேயே ஒரு தருமம் இருக்கில்லே ' எங்க முதலாளி பக்திமா லுங்க. பெரிய கோவில் பிரம்மோற்சவத்துல குதிரை வாகன மண்டகப்படி பூரா அவருது. இதைத் தவிர வருஷா வருஷம் பங்குனி உத்தரத்தன்னி கல்யாணத்திலே அம்மன் சுண்டு விரலுக்கு கெட்டி மோதிரம் அஞ்சு தலை பாம்பு படம் எடுத்து சொளை யா மூணு பவுனுக்கு குறைவில்லே. எங்க முதலாளிக்கு முழுகிப்போன தங்கத்துக்குப் பஞ்சமா?

இத பாருங்க. சூத்திரத்தின் சூத்திரத்தின் சூச்சுமமே இதான். மாஹாணியும் முந்திரியையும் அவங்க மந்திரமா ஜெபிச்சா பவுனு, தானா களுத்துலேயும், காதிலேயும் இடுப்புலேயும் (இடுப்பா அது ? மாவாட்டற கல்லா ?) பூட்டிக்கிது. இதுநான் சொல்லுது. மண்ணுலே புதைச்சு மறந்தது போக, பானையில உண்டை உண்டையா ஒளிச்சு, வந்தவன்கண்டுபிடிச்சுப் போனது போக மிச்சம் இன்னும் மூணு தலைமுறைக்கு கவலையில்லை.

சாமி நான் அனுமாரா வாயைப் பொத்திக்கிட்டுப் பேசறேன். ராமரைச் சொல்வியும் ஆவனும். ராமனைக் காட்டிக் கொடுக்கவும் மாட்டேன். நான் கவுடு இல்லாமே விட்டுப் பேசறேன். அவ்வளவுதான். நான் குத்தம் சொல்லல்லே. பத்து வயசுலே இந்தக் கடைக்குத் தினம் மத்யானச்சயா, மாசம் முப்பது முடிஞ்சதும் முளுசா மூணு ருவா சம்பளத்துக்கு வந்தேன். எனக்கு இப்போ வயது அறுவத்திரளு. ஏந்தா, நின்னா, முட்டிப்பூட்டு விட்டுப் போவுது. எனக்கும் என் பொண்ணு மூணுக்கும் கல்யாணத்