பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷岛 லா , ச, ராமாமிருதம் டோம். திருப்பினா அவனுது முழுகினா நம்மது நியாயந் தானே. ஏழைபாழை மட்டுமில்லை. பணக்காரன் கூட. பாங்க்குவரை பேர் போகாமே மானம் பாக்கறவன், அப்பாவுக்கு தெரியாமே புள்ளே, புருஷனுக்கு தெரியாமே பெண் சாதி, ஒரு வைப்பாட்டிக்குத் தெரியாமே மைனர். அவங்க அக்கப்போர் எல்லாம் நமக்கு எதுக்கு? அப்பா, கடனை கொடுத்துட்டு பொருளை மீட்டுக்க', இந்த ருத்திராச்ச கண்டியைப் பார்த்தீங்களா? சும்மா கையிலே துரக்கிப் பாருங்க. இந்த நாள்லே இப்படிச் செய்ய முடியுமா? இந்தப் பொன்னுதான் உண்டா? பிணக்னம் கனக்கல்லே? வச்சுட்டுப் போனவன் இன்னும் திருப்பப் போறான். மூணு தலைமுறையாச்சு. அவன் பொணத்தை அவன் வயல் கிணத்துலேருந்தே எடுத்தாங்க, கழுத்துலே ரெண்டு கத்திக்குத்து. பொணத்தை நானே பார்த்தேன். அவன் புள்ளையைக் கட்டிக்கிட்டு நானே அழுதேன். ஆனா பண்டத்தைப்பத்தி மூச்சு விட்டிருப்பேனா? இது போல ஏதேதோ. என்னென்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே அடுக்கி வெச்ச பண்டத்துல ஒரு குந்து மணி குறைஞ்சாலும் முதலாளி ஆச்சிக்கு மூக்கிலே ஓ! படி ஏறியும் பார்க்கணுமா? வாங்க!! வெண்கலத் துக்கும் பித்தளைக்கும் கொடுக்க மாட்டீங்களே! பார்த்து ஏறுங்க. இங்கே எல்லாம் படி குறுகல், நம்ப மாதிரி தாட்டிகளுக்கு தகறாறுதான்.

ஆ என்ன மலைச்சு நிக்கறய..எத்தனை குத்து விளக்கு ஒரு முகம், மூனு முகம், அஞ்சு முகம்-எத்தனை குடம், எத்தனை அண்டா, எத்தனை தவலை தட்டு, டிடன் செட், சின்னது பெரிசு, நடு லைசு, இதென்ன பாத்திரக் கடையோன்னு பாக்கறையளா? இது மேடையில ஏழை கடன். கீழே பேழையிலே பணக்காரன் கடன். ஐயா நான் சொல்றேன். உழவன் கணக்கு ஓயாக் கணக்கு. அதைச் சித்திரபுத்ரன் கூட கட்ட முடியாது. அவனுக்கு கஷ்டத்தை மறக்கனுனாச்சும் குடிச்சாவணும். சுகத்தைக் கொண் டாடினாச்சும் குடிச்சாவணும் ஐயா பசுவிலே சாது