பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபக் 59

இல்லை பிராம்ணன்லே சாது இல்ல்ேன்னு (சாமி மன்னிக்க!) சொல்றோமில்லே! அத்தோட சம்சாரியும் சேர்த்துக்கணும்னு நான் சொல்வேன். அப்புறம் என்ன எல்லோரும் பொல்லாதவரே. கடன் வாங்கற வரைக்கும் காலைப் பிடி. வாங்கினப்புறம் காணாம போயிடு. இத பாத்திங்க்ளா இந்த சோத்துக் கிண்ணத்தை? இதுக்குள்ளவன் வெச்சு வாங்க வந்தப்போ மாட்டேன்னு அடிச்சுக்கிட்டேன்.

'ஏம்பா இசக்கி இதுக்கு என்னதான் வரும்னு நினைக்கே?"

'கொடுக்கறதைக் கொடுங்க.” "வச்சப்புறம் எதுலே சாப்பிடுவே?” 'உள்ளங்கையை ஆண்டவன் எதுக்கு படைச் சிருக்கான். அள்ளுக்குத்தானே! கிண்ணி வர்ர வரைக்கு அவளே ஊத்தறா. அதுமேலே ஊறுகாயும் வெக்கறா. அதுவே ஒரு ருசி.'

ஆமாம். பசிக்கிறவன் ருசியா பாக்கறான்? என்னென் னவோ சொல்லிப் பார்த்தேன். உடனே மேல்துண்டுலே கட்டின மூட்டைலேந்து முள்ளங்கி முடியை எடுத்தான் பாருங்க. இலையும் தழையுமா தவப் பிஞ்சு அஞ்சு முள்ளங்கி. முள்ளங்கின்னா எனக்கு ரொம்ப பிரியமுங்க. பருப்பு வேணாம். தேங்கர்யும் தேவையில்லை. வெத்தா அவிச்சுக் கொட்டி உப்போடு தாளிதம்...ஆஹா, நாக்கிலே ஜலம் ஊறுது. லஞ்சம்னு நீங்க சொல்லுவீக. அன்புன்னு அவன் சொல்லுதான். ஆமான்னு நான் சொல்லுதேன். சரி எல்லாமே அப்பிடி அப்பிடித்தான் ஐயா, அவனுக்கு மூணு வட்டிக்கொடுத்து வாங்கி மீட்டு மூணு நாள் பொறுத்து, திரும்ப வெச்சாத்தான் அவன் மாடா உழைச்சது அவன் உடம்புலே ஒட்டுது. நீங்களும் நானும் என்ன செய்ய? இன்னொரு பீரோலே அவங்க அவங்க அவசரத்துக்கு வச்சுட்டு போன புடவை, வேட்டி அடுக்கி வச்சிருக்கு. இன்னுங் கேட்டா சோம்பு அள்ளித்