பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ லா. ச. ராமாமிருதம்

தெளிச்சாப் போல அவன் பையன் படிச்சு பெரிய சர்டிபேட்டு கூட. சரி சரி. அதெல்லாம் நீங்க தாள மாட்டீங்க. இப்பவே உங்க கண் துளும்புது. நீங்க உங்க வேலைக்கு லாயக்கில்லேன்னு கண்டுகிட்டேன். சாமி மன்னிக்க. சரி இறங்குவோமா?

சாமி தப்பா நினைக்காதீங்க. ஆச்சிக்கு இஷ்டப் பட்டா சொல்லி விடுங்க விளக்கோ, குடமோ, தவலையோ, எந்தப் பண்டமோ சகாயமா முடிச்சுத் தர்ரேன். வாங்கிப் போட்டா பொண்ணுக்கு சீர் ஆவுது. சுறுசுறுப்பா செவத்த தே லா இரட்டைப் பின்னல் போட்டுகிட்டு ஒன்பது மணிக்கு கிளம்புதே அதுதானே? அந்த வேளைக்குத்தான் நான் வேலைக்கு வர்ரேன். செல்லப் பொண்ணு. நல்லாயிருக்கனும். சரி. வர் ரீங் களா?'

★ அன்றிரவு நான் ஒரு கனாக்கண்டேன். அத்தனை குத்து விளக்குகளும் குப்பென தானே ஏற்றிக் கொள்கின்றன. அவைகளின் வரிசை பாம்பு வளைவில் நெளிகின்றது. அதினின்று ஆடும் நிழலும் ஒளியும் இழைந்து கலந்த தண்ணொளிப் பிழம்பு இதழ் இதழாய் விரிந்து கொண்டே கண்ணைக் கவிகிறது. இப்பெருமலரின் வயிற்றிலிருந்து மங்கலக் குலவையா? உயிரின் ஒலமா? பிரித்துப் புரியவில்லை. பின்னணியில் ஒரு இரைச்சல் அலை பாய்கிறது.

இவ்வொளி மலரின் இதழ்களில்:-ஒன்றில், ஒருத்தி படத்துக்கெதிரே குத்துவிளக்கு ஏற்றுகிறாள். அவளுடைய புதுப் புடவை புசுபுசுக்கிறது.

இன்னொரு இதழில்: கழுத்து வரை இழுத்துப் போர்த்தி, தரையில் வளர்த்தியிருக்கும் உருவத்தின் தலைமாட்டில் தட்டில் அகல் எரிகிறது. தேங்காய் உடைத்து வைத்திருக்கிறது. அவன் அருகே அவனுடைய ஸ்த்ரி கைகூப்பி அமர்ந்: