பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱罗 லா. ச. ராமாமிருதம் இதழில் அவள் குதிகால் பட்டுவிட்ட இடத்தில் பொன்னும், மஞ்சளும், சிவப்புப் பொட்டும் பொட்டுப் பொட்டாகச் சிந்தி ரேகை மின்னுகிறது. அவள் இடை என் நெஞ்சில் சென்றுபோன என் இளமையின் நாட் களைக் கடைகிறது. கூந்தலின் கோடரி முடிச்சில் நீலக் கனகாம்பரம் தளையவிழ்ந்து சிரிக்கிறது. வரும் வழியில் குத்துவிளக்கின் பாதம் தடுக்கி,

ஐயோ !!! என் நெஞ்சு தாவுகிறது. நல்ல வேளை விழவில்லை. ஆனால் குடம் இடையிலிருந்து நழுவி உருண்டு இதழ்களின் படிகளில் தத்தித் தத்தி ஓடுகையில் பாலருவி பூ பூரா பாய்கிறது.

ஆ இதென்ன, இதழ்களின் பாறைகளில், பாலோடு ரத்தமா ? என் வயிறு சில்லிடுகிறது. அதைப் பார்த்தும், அவள் சிரிப்பு ஒயவில்லை. மெதுவாக என் பக்கம் திரும்புகிறாள் என்னைப் பார்க்கிறாள். அவள் முகத்தில் கோபமற்ற தீ கொழுந்து விட்டு எரிகின்றது.

'ஜ்வாலமுகி: 'ஜெகத் தீபா" 'காலகல்பாந்தகி" கூந்தலிலிருந்து பூச்சரத்தைப் பிய்த்து என்மேல் எறி கிறாள். அது கங்குபோல் காற்றில் மிதந்து என் மேல்

நான் விழித்துக் கொண்டேன். - விடியிருட்டு, மார்கழி குளிர் கன்னத்தில் வெடுக் கெனத் தேள் கொட்டிற்று மசூதியிலிருந்து இமாமின் கூவல் நமரி சுக்கு எழுப்புகிறது என் கன்னங்கள் நனைந்திருக்கின்றன.

நான் கண்ட தரிசனத்தின் நெருப்பு ஏழையின் வயிற்றெரிச்சலா அல்லது இன்னும் அவன் நம்பிக்கையின் ஒளியா ? * தீபக் ராகத்தை தான்சென் பாடியதும் தீபங்கள் தாமே ஏற்றிக் கொண்டனவாம்.