பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金会 லா. ச. ராமாமிருதம்

விட்டது. பணக்காரன் மோட்டாரில் ஒட்டம் பிடித்தால், ஏழை ரிக்ஷாக்காரன், தன் பெண்டாட்டி பிள்ளையையும், ஒட்டைப்பானையையும் ஒலைப்பாயையும் ரிக்ஷாவில் வைத்துக்கொண்டு ஓடினான். ஜன நடமாட்ட மற்று, தெருக்களும், தெருக்களில் கட்டடங்களும் பயங்கரமாய்த் திமிர்த்துக்கொண்டு நின்றன. அசையாப் பொருள் களாகிய தமக்கும் தம்முடைய அசையாத் தன்மை யினாலேயே அச்சமுறுத்தும் உ யி ரு ண் டு எனக் காண்பித்தன.

நாளை முதல் இந்த வீடும் அம்மாதிரிச் சாபம் பிடித்த வீடுகளுள் ஒன்றாய்விடும். ஏனெனில் மாதுவின் குடும்பத் தாரும் விடியற்காலையில் வண்டியேறப் போகிறார்கள். மாது ஆனால் லேசில் கிளம்புவதாயில்லை. மாது பெரிய இரும்புத் தலையன்.

இப்போத்தான் உத்தியோகத்தில் ஒட்டிக்கொண் டிருப்பவனுக்குச் சம்பளம் உயர்த்திக்கொண்டிருக்கிறான். முதலாளி வேலைக்காரனைக் கெ ஞ் சு. ம் காலம் இப்போதான் வந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் அடித்துப் பிடிங்கிச் சம்பாதிக்காமல் எப்போடா சம்பாதிக்கிறது” அடேயப்பா, மாது பெரிய பேர்வழி. அவனுக்கு வாழ்க்கையில் ஒரே குறிதான். ஒரு ரூபாயை எப்படி பத்து ரூபாய் ஆக்குவது, பத்தை எப்படி நூறாக்குவது? ஒரு நிமிஷம் சும்மாயிருக்க மாட்டான். பக்க ஜோலி பத்து வைத்துக்கொண்டிருந்தான். எல்லோருக்கும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளெனில் அன்றுதான் மற்றைய நாட்களை விட வேலை அவனுக்கு மிகவும் மும்முரம். இத்தனைக்கும் மாதுக்குப் பூர்வீகச்சொத்து ஊரில் இருக்கிறது. பங்குக்கு உடன் பிறந்தவர்களும் கிடையாது. இருந்தும் அவன் பிறந்த வழி அப்படி:

அவசியச் செலவு காலணாக் கூட அளந்துதான் பண்ணுவான்.

அடிக்கடி அவனுக்கும் பாருவுக்கும் தர்க்கம் வந்து விடும்.