பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ லா, ச. ராமாமிருதம்

பெண்டாட்டிகளைக் கட்டிவைத்து விடுகிறார்கள். கூடவே கலியும் பிடித்து விடுகிறது. உன் மாதிரி யிருந்தால், நான் இத்தனை நாளைக்குப் பட்டணத் திலேயே ஒரு வீடு வாங்கியிருப்பேன். இதோ பார். பாரு மறுபடியும் வருகிறாள். இப்பொழுது என்னத்தைக் கேட்கப் போகிறாளோ, தெரியவில்லை. எ ன் ன சமாசாரம்?”

"இன்னிக்கு ஜப்பான்காரன் நோட்டிசை வாரி இறைச்சானாமே, புதன் கிழமை வரப்போறேன். எல்லோரும் முன்னைக்கு முன்னாலே ஊர் டோய்ச் சேருங்கோ’ன்னு”

'ஆரம்பித்து விட்டாயா? இந்த ஜப்பான்காரன் எங்களிடம் சொல்வியிருக்கிறானோ இல்லையோ, முதலில் நம் வீட்டுப் பொம்மனாட்டிகளிடம் கண்டிப்பாய்ச் சொல்விக்கொள்கிறான். நான் வருகிறேன், இட்லி தோசைக்கு அரைத்துப் போடுங்கள்."

‘'எதுவுமே உங்களுக்கு வேடிக்கைதானா? கோடி யாத்திலே இன்னிக்கிக் கிளம்பிட்டா-”

சரிதான் போ, வேலையைப் பார். எல்லோரும் பண்ணுகிறதை நான் பண்ண முடியுமா?

மாது இவ்வளவு வீறாப்புப் பேசினானே யொழிய, திடீரென்று ஒரு நாள் தெருவில் எல்லா வீடுகளும் பொட்டலான பிறகு, தன் வீடு தனியாய் நின்றதைத் தானே உணர்ந்ததும், அவனுக்கே சற்று 'திக்கென்றது. அத்துடன், ஊரில் இவ்வளவு வெளியேற்றமும் நிசப்தமும் நேர்ந்துவிட்ட பிறகுகூட, கொஞ்ச நாளாய், முன்னை விட உடலும் மனமும் இருப்புக் கொள்ளாத ஒரு பரபரப்பு. ஆபீசில் கூட, ஒருவர் முகத்தையொருவர் பார்க்கையில், அங்கு வாய்விட்டுச் சொல்லவும் மெல்லவும் முடியாது. உள்பயத்தால் ஏற்படும் ஒரு மனத் தவிப்பு. போலிஸ், ராணுவம், ஏ. ஆர். பி. வேலையைச் சேர்ந்த