பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁怒 லா, ச. ராமா மிருதம்

எண்ணிப் பேசிப் பேசி உக்கிப் போவார். அவர் பார்த்த பழங்கணக்குகள் தாம் அவர் உடலையும் உள்ளத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றன.

அவசர அவசரமாய்க் கூப்பிடுவார்.

'மல்லி, இப்படி உட் கார், என்னைப் பார், வாழ்க்கை : _* - : میسر 始 w to 令 - * .# o: யில் என் தோல்வியைப் பார்த்துப் புத்தி தெரிந்து பிழைத் துக்கொள். நான் நன்றாயிருந்து சின்ன வயதில் புத்தி சொல்ல யாருமில்லாததால் சறுகி விட்டேன். என் கண் மூடுவதற்குள் நீ வயிற்றிற்குக் கஷ்டப்படாமல், ஏதாவது ஒரு உத்தியோகத்தில் நிலைத்துவிடுவதை நான் பார்த்து விட்டால் எனக்குப் போதும்.

"என்னப்பா எப்போ பார்த்தாலும் வயிற்றுப் பிழைப் பைப் பற்றிய பேச்சுத்தானா ? வேறெதுவுமில்லையா ? 'பின் எதைப்பற்றிப் பேசவேண்டுமென்கிறாய் ! உல கத்தில் அதைவிட முக்கியம் எது ? எப்படியாவது இந்த வருஷம் இந்த ஷார்ட்ஹாண்டு, டைப்ரைட்டிங்குப் பரீrை...”

'எனக்கு இந்த ஷார்ட்ஹாண்டு, டைப்ரைட்டிங்கு பிடிக்கவேயில்லை.”

அப்பாவுக்கு முகம் கறுக்க ஆரம்பித்துவிட்டது. 'லோகத்தில் எல்லாமே அவனவனுக்குப் பிடிக்கிறபடி நேருமா ? பிழைக்கிற வழியை முன்னால் பார். எப்படியும் எனக்கப்புறம்தான் நீ உன்ன்ைவிட நான் உலகத்தில் அடி பட்டிருக்கிறேன். நான் சொல்வதை...'

'எல்லோரும் பண்ணுவதையே நானும் பண்ண ணுமா ? ஏதாவது புதிசாய்...”

அ ப் பா வுக் குக் கோபம் மண்டைக்கேறிவிட்டது. ஒரேயடியாய்ப் படபடவென்று சத்தம்போட ஆரம்பித்து விட்டார்.