பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியூகம் 密锣

"என்ன பண்ணப் போகிறாய்? நீ என்ன, ஸர். ஸி. வி. ராமனா ? புதிசாய் பண்ணப் போகிறானாம், புதிசாய் என்ன பண்ணப் போகிறாய், புதிசாய் ?"

ஆம் என்ன பண்ண வேண்டும் இந்த நியாயமான கேள்விக்கு விட்டுச் சொல்ல என்ன பதில் அவனிடமிருக்

ஆயினும் விட்டுச் சொல்ல முடியாத பதில்கள் ஒரே சமயத்தில், எத்தனை மனதில் எழுகின்றன ! . முழுடிை குலைந்து, கொப்பரைத் துருவலைப்போல் செதிள் செதி

ளாய் ஒன்றுக்கொன்று சம்மந்தமற்ற சிதர்கள்......

எங்கேயோ, எப்பவோ, ஜன்னற் கதவில் பதித்த நீலக் கண்ணாடியின்மேல் சூரிய ஒளிபட்டு எதிர்ச் சுவரில் நீல நிழல் தளும்பியாடுவதைக் கண்ட ஞாபகம் இப்பொழுது அவனுக்கு வந்தது. அச்சமயத்தில் அவன் உணர்ச்சிகளை அந்நீலச் சாலையின் அழகு அசைத்த வேகத்தில், தானும் அந் நிழலுள் ஒளிந்துகொண்டு அதன் ஆட்டத்துடன் இழைந்து ஆ ட வே ண் டு ம் எ னு ம் அர்த்தமற்ற பித்துப் பிடித்த எண்ணம் ஒன்று தனக்குத் தோன்றியதை நினைக்கையில் இப்பொழுதுகூட அவன் உள்ளத்திலிருந்து உதட்டிற்கு ஒரு புன்னகை எழுந்தது.

'இதுதான் நான் செய்ய விரும்பியது' என்று அப்பா விடம் அவன் சொல்ல முடியுமா? -

இன்னொரு சிதர் சிந்தனையில் மூண்டது. ஒரு வருஷம் ஊரில் பெ ரு மா ள் கோயில் உற்சவத் திற்கு மஹாராஜபுரம் விசுவநாதையர் பாட வந்திருந் தார். அப்பொழுது அவனுக்குச் சங்கீதத்தில் ஆசையே யொழிய ஞானம் அதிகமில்லை. ஆகையால் அவர் என்ன பாடினார் என்று திண்ணமாய் அவனுக்குப் புரியவில்லை, இருந்தும், இரவில் பாதியும் கிடந்தபிறகு, நெருப்பில் உருக்கியது போன்று பாகுபட்டுப் போன அச்சாரீரம். தனக்கென்றே தனி உயிர் பெற்றுக்கொண்டு, சரிகையோடு