பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*爱 லா. ச. ராமாமிருதம்,

எங்கேயோ ஒரு இனிப்பும் ருசிக்குத் தட்டுவதுபோல் தோன்றுகின்றன. ஆனால் அந்த இனிப்புக் கண்ட இடத் திலேயே மறுபடியும் கடித்தல் அந்த இனிப்பைக் காணு வதற்கில்லை. அப்படியே இனிப்பு இருந்தாலும் அதே இனிப்பு இல்லை....

"என்னடா யோசனை பண்ணுகிறாய்?" அப்பாவின் பொறுமையற்ற குரல் அவன் சிந்தனை களிலிருந்து அவனை அடித்து எழுப்புகிறது. அவன் நினைப்பதையெல்லாம் அப்பாவிடம் என்னென்று சொல்ல முடியும்? சொன்னால்தான் அவருக்கு என்ன புரியப் போகிறது. அவனுக்கே புரியவில்லையே? இந்தப் பேச்சைத் தொடர்வதில் ஒரு அசதிதான் ஏற்படுகிறது...... சரிதான் அப்பா, ஷார்ட் ஹாண்டு பரிகைக்கே போகிறேன்.”

'அதுதான் சரி, உனக்கு இப்பொழுது தெரியாது. உனக்கு நல்லத்தைத் தவிர என்னத்தைச் சொல்லப் போகிறேன். ஒடுகிற பாம்பை மிதிக்கிற நாளில் குருட்டு யோசனை பண்ணிக் கொண்டிருக்காதே."

அவ்வளவு ஆசையாய் அவன் எதிர் காலத்தைக் கணித்த அப்பா, அவர் கணித் கபடி அது நடப்பதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. ஒருநாள் இரவு வேளை எல்லாரும் ஏதோ சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் படுக்கும் வேளையில், அப்பா பாலைக் குடிக்கையில், புரைக்கேறி விட்டது. அம்மா பதறிக் கொண்டு அவர் வாயில் வார்த்த இரண்டாவது முழுங்கு வாயோரம் வழிந்தது. அப்பாவின் தலை டக்" இென்று தலையணையில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டது. அவர் முகம் மனக்கண்முன் வந்து நிற்கிறது. கடைவாயில் ஒழுகிய பால் முன்போல் வளர்ந்த தாடி மயிர்களின் நுனிகளின்மேல், துளித்துளியாய் நிற்கின்றன. இமைகள் விழிகளை அரைக்கண்ணாய் மூடின.