பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨晏 லா. ச. ராமாமிருதம்

சுயச் சிந்தனையாலும் அவன் வாழ்க்கைக்குக் கண்டு பிடிக்க முயன்ற அர்த்தத்திற்கும் அவன் அனுபவமாய்க் கண்டதிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்று இருந்தன. இவையிரண்டிலேயுமே எது உண்மை?

மனம்தான் இவ்வளவு பாடுபடுகிறதேயொழிய, காலம் கழிந்து கொண்டு தானிருக்கிறது. அதன் கதியிலேயே ஒரு இரக்கமற்ற தன்மையிருக்கிறது.

'படுவதையெல்லாம் நீ ப ட் டு க் ெக | ண் டி ரு. போவதை நான் போய்க் கொண்டிருப்பேன். என்னைத் தடுக்க யாராலும் முடியாது. என்னாலேயே முடியாது....'

அப்பா இறந்து போய்விட்டார் என்று, அவனால் அவன் இ ஷ் ட ப் ப டி என்ன செய்யமுடிகிறது ? அவர் இஷ்டப்பட்ட பரீகைகளுக்குத்தான் படிக்க நேர்ந்தது. ஆவிபிரிந்து இவ்வுலகை நீத்த பின்னரும், இறந்த உலகிலிருந்து கொண்டே, இறந்தவர் உயிருள்ள உலகத்தில் நடத்தும் ஆக்கினைகள்தாம் உண்மையா ?

எதுதான் புரிகிறது ?

கடனோடு கடனாய் அவன் தங்கைகளுக்கு எப்படி கலியாணத்தை முடித்து வைத்தான் என்பதை இப் பொழுது யோசிக்கையில் திகைப்பாய்த்தானிருக்கிறது.

ஒரு தடவை புக்ககம் போய் வந்த தங்கைமார்கள் எப்படி மாறிவிடுகிறார்கள் ! ஒட்டாமல் நுனி நாக்கால் பேசும் தினுசும், உடலையும் முகத்தையும் கோணிக் கொள்ளும் மாதிரியும் பார்த்தால் 'ஏதேது, இதுகளெல் லாம் நம் உடன் பிறப்புத்தானா ! இங்கு இருக்கையில் ஒரு முழம் பூவிற்கும், அடிக் குழம்பு சாதத்திற்கும் சண்டை பிடித்தவர்கள் தானா ? என்று அவனுக்கே சந்தேகம் தோன்றுகிறது.

எங்காத்துலே ஒரு நாளைப் பார்த்தாப்போல் உருளைக்கிழங்கு வறுவல் நெய்யிலே வறுத்துப் போடணும்