பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

警6 லா. ச. ராமாமிருதம்

'பசிக்கவில்லை’ 'ஏதோ இறங்கின மட்டும் சாப்பிடேன்” 'இல்லை, இல்லை, எனக்கு உடம்பு சரியாயில்லை” பாரு அரை மனதுடன் ஒரு அரைகணம் நின்றுவிட்டு, பிறகு அசதி நடையுடன் கீழே இறங்கிப் போகிறாள்.

கால கதியில் மனிதர்கள் மாறுவதையும், அச்சிந்தனை யின் தொடர்பில் இப்பொழுது இப்படியிருக்கும் பாரு, இதற்கு முன்னால் எப்படியிருந்தாள் என்பதை நினைக் கையில் கால புருஷனின் மேல் சகிக்க முடியாத ஒரு கரிப்பு. அவன் மனதில், பாம்பைப்போல் சீறிக்கொண்டு எழுந்து நெளிவதை யுணர்ந்தான், ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்றும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என்றும், உயிர்கள், தமக்குள் தாம் வகுத்துக்கொண்டு விரதம் அனுஷ்டிப் பினும் அவன் அணைப்புக்குத் தப்பித்துத் தங்கள் கற்பைக் காத்துக் கொண்ட உயிர்கள் எதுவுமேயில்லை. அவன் அனுபவித்த பின்னர்தான் அவைகளை அவன் எப்படி முறித்தெறிகிறான்! எத்தனை அனுபவித்தும் அவன் வெறி ஏன் இன்னமும் தணிந்த பாடில்லை ?

அன்னாளைய பாரு கட்டுக் கடங்காத குதிரையாய் வளைய வருவாள்; நடையாய் வரமாட்டான், குதித்துக் கொண்டுதான் வருவாள். துளசி மாடத்தண்டை ஒருகால் வைத்தால், மறுகால் அம்மி போட்டிருக்கும் தாழ் வாரத்தில்தான் வந்து குதிக்கும் பூமியதிரும்.

"ஐயோ பாரு-நீ பொம்மனாட்டி டீ இன்னமும் கொஞ்சம் அமரிக்கையாயிருக்கணும்டி- நான் பெத்த பொண்ணுன்னா எனக்கு மானம் போறதேடி' என்று அவள் அம்மை அடிக்கடி தன் கன்னங்களை நிமிண்டிக் கொள்வாள்.

சரிதாம்மா போம்மா’’

"ஐயோ, குரலைக் கொஞ்சம் த ழ் த் தி ப் பேசேண்டி-”