பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 லா. ச. ராமாமிருதம்

கிருக்கும் ஒன்றிரண்டு செல்வங்களைத் தனக்கெதிரே பரப்பிக்கொண்டு அவைகளைப் பார்த்து மகிழ்வதைப் போல் மனமும் இடமும் கூடிய சமயங்களில், நாம் அச்சம்பவங்களைச் சிந்திக்கையில், சதா இருண்டிருக்கும் மனக்கம்பளத்தில், அத் தனி நினைவுகள் மாத்திரம் உருண்டு கொண்டு தனிச்சுடர் விடுகையில் நம்முள் ஊறும் இன்பமும் தனிதான். இன்ப நினைவுகளாயிருப்பின் மனத்தைச் சந்தோஷத்தில் ஆழ்த்துகின்றன. துக்க நினைவு கனாயிருப்பினும் திரும்பத் திரும்ப எண்ணுவதால், அவைகளும் ஒரு துலக்கம் பெறுகின்றன. அத்துாய்மையும் இன்பமாய்த்தானிருக்கிறது. -

அம்மாதிரி முன்மணம் வீசிக்கொண்டு அவன் மனப் பேழை திறந்து பாருவைப்பற்றிய ஒ ன் றி ர ண் டு நிலகனவுகள் வெளிக் கிளம்புவதை உணர்ந்தான். -

அவன் மன வெளியில் இப்போது ஒரு காட்சி அமைகிறது:

நடு வெய்யில் முதுகைப் பிளக்கிறது. பக்கத்துக் கிராமத்துக்கு ஏதோ ஜோலியாய்ப் போய்விட்டு, வயல், வரப்புக்களின் வழியே வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறான். சுற்று முற்றும் எவருமே தென் படவில்லை. வயல்களில் அங்குமிங்கும் ஏர்கள் சில தனித்து நின்றன. வெய்யிலின் கடுமையாலோ, அ ல் ல து மத்தியானக் கூழுக்கோ, உழவர் வேலையினின்றி இறங்கி யிருந்தனர்.

எதிரே பூமி, கசத்தின் கரை மேட்டுக்கு வழுக்கிக் கொண்டு ஏறுவது தெரிகிறது. கசமேட்டில் வேலி நட்டாற் போல், மரங்கள் கிட்டக் கிட்ட வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. கசந்தாண்டினால் ஊர். ஆகையால் கரை மேட்டில் ஏறினான்.

முதலில் அவன் கண்களில் பட்டது எதிர்க்கரையில் வந்தாய்ச்சுருட்டி வைத்திருந்த புடவைதான். பூக்கள்