பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

含翰 லா. ச. ராமாமிருதம்

உச்சிக் கால மணியின் சத்தம் தூரத்திலிருந்து ஏதோ வடிகட்டப் பெற்ற அர்த்தத்துடன் வந்து மோதுகின்றது. தூயதான நீலவான் ஒரு பெரிய வயிறுபோல், அவன் உள்பட எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டிருக்கிறது. அவனெ திரில் அகன்று விரியும் ஜலத்தில் இவையத்தனை யுடன் வெகு பொருத்தத்துடன் தன்னையறியாமல் இயங்கிக்கொண்டு, பாரு ஸ்நானம் பன்னிக் கொண் டிருக்கிறாள். வான் எனும் வயிறு அடக்கியிருக்கும் வித்துத்தானா அவள்?

ஆதியில் எல்லாம் இப்படித்தானே யிருந்திருக்கும் ே அப்படியாயின் இதுதான் விடுதலையா? அவன் தன்னை மறந்து சிந்தனையில் ஆழ்ந்து விட்ட தில், அவள் அவனைப் பார்த்து விட்டது கூடத் தெரிய வில்லை. தேளைத் தொட்டதுபோல் கொட்டிய வெடகத் தில் அவள் முகத்தில் ரத்தம் குழம்பியது. மறுகணம் ஒரு பெரும் ஜலத்திரை எழுந்து அவன் முகத்தில் விசிறி விழுந்து அவன் உடலைத் தெப்பமாக்குகிறது. கண்களை நிரப்பிய ஜலத்தை உதற். கைகள் முகத்தைப் புதைத்தன. அவன் காதில் ஒரு சிறு சிரிப்பு-வெட்கச் சிரிப்பு ஒலித்தது. அவன் சமாளித்துக்கொண்டு முகம் நிமிர்வதற்குள் அவளையும் அவள் புடவையையும் காணோம். சிட்டாய்ப் பறந்து விட்டாள்.

அவள் ஜலத்தில் உட்கார்ந்திருந்த இடத்தில் இதழ்கள் அகல விரிந்ததோர் பூ மிதந்து கொண்டிருந்தது.

புஸ்-புஸ்-' பத்தடி தூரத்தில் அவனுக்கெதிரில் ஒரு தாழம்பூப் புதரிலிருந்து விரித்த படத்துடன் ஒரு நல்ல பாம்பு அவனைச் சந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

அவனுக் கென்னவோ, அச்சமயம் அதைப் பார்த்துப் பயம் ஏற்படவில்லை. அவனே அவன் வசமில்லை. அவனை அழுத்திய மூர்சையிலிருந்து தெளிய அவனுக்குச்