பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&2 盆、子。さF。 ராமாமிருதம் போயிற்று. அவன் மார்பிற்கும் தொண்டைக்குமாய், வாய்வழி வெளிப்பட முயல்வதுபோல் உள்ளக் குருவி பறந்து குதிக்கத் தலைப்பட்டது. இப்படி அவர்கள் சதை யோடு சதை தீண்டுகையில், உள்ளத்துடன் உள்ளம் திண்டியதா? உள்ளங்கள் ஒருமித்தலில் உண்டாகும் இன்பம் இவ்வளவு பெரிதா? உடம்பு உள்ளத்தில் உருகி உடம்பே உள்ளமாய் விடுகிறதா? அப்பறம், உள்புறம் என்று இல்லையா? எல்லாம் ஒரே வெள்ளந்தானா? துன்பமும் வேதனை இன்பமும் ஒரே வேதனைதானா, இப்பொழுது அவனுள் குதிக்கும் உள்ளக்குருவி, அவனை ஊசலாட்டுவது போல?

"நான் குளிச்சதை அம்மாவிடம் சொல்லுவையா?” அவன் தலையை ஆட்டுகிறான். அவனுக்கு மாரைப் பக், பக்.கென்று அடைக்கிறது. அவனுள்ளிருந்து கொண்டு, அவனைப் படுத்தும் இன்ப வே த ைன பயங்கரமா யிருக்கிறது. இதற்கு இக்கிணற்றடிதான் சாட்சி. துளசி மாடத்திலெரியும் விளக்குத்தான் சாட்சி.

'குடத்தைத் தேடிக்கொண்டே இப்போ சறுக்கி விட்டதையும் சொல்லமாட்டையே ?”

அவனுக்கு நாக்குத்தான் மேல் கூரையை முட்டுகிறது. அவன் கைகள் அவளுக்காக அவளுடன் சேர்ந்து தேடு கின்றன குடத்தை அவள் இடுப்பில் வைக்கின்றன. திடீரென்று சகிக்க முடியாத தனிமையுடன் தான் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். சகிக்க முடியாத தனிமை, வெளியிருள் அவனுள் இறங்குவதையும் உணர்ந் தான். அவ்விருளில் அவன் மனக்கண்ணெதிரில் இரண்டு பொறிகள் தெரிகின்றன. ஆம்: ஞாபகம் வருகிறது. அன்று. மத்தியானம் தாழம்புதரில் அவன் கண்ட அரவின் கண்கள். அவனையுமறியாமல் அவன் கைகனை. நீட்டு கிறான். - -

'இதோ என்னைக் கடி. என்னை ஏற்றுக்கொள், என்னைக் கோபியாகே. என்னை அன்புட்டின் கடித்து