பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 லா. ச. ராமாமிருதம்

தன் தனி வயிற்றை அலம்பவும், குடும்பக் கடன்களை அடைக்கவும் இப்பொழுது அவன்தான் எஞ்சி நின்றான். வாழ்க்கையில் எந்த வெற்றியின் சின்னமாய் இப்பொழுது அவன் விளங்கினான் என்று அவனுக்கே புரியவில்லை. எதுதான் புரிகிறது? எதுதான்... -

அவன் அப்படியே துரங்கித்தான் போய்விட்டானா, அல்லது விழித்துக் கொண்டிருந்தானா என்றே தெரிய வில்லை. திடீரெனக் குடலைக் குழப்பும் ஒரு ஊளை எங்கிருநதோ கிளம்பியது. பாம்பைப்போல் வளைந்து வளைந்து பக்கத்தறையிலும் கீழேயும் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருக்கும் சப்தம்.

அபாயச் சங்கு அவன் முதுகுத் தண்டு சில்லிட்டது, வாசலில் ஆட்கள் ஒடுகிறார்கள். கீழேயிருந்தவர்கள் மாடிக்கு ஓடிவருகிறார்கள்; மாடியிலிருந்தவர்கள் கீழே ஒடுகிறார்கள்; ஒருவரையொருவர் முந்திக்கொண்டு பாரு-மாது-அவன்-பாதிப் படியில் பாரு க்ரீச்சென்று கத்தினாள். மனிதக்குரலாயில்லை. மிருகத்தின் அலறல் தான். "ஐயோ குழந்தை. அப்பொழுது அவன் தன் கையில் குழந்தையிருப்பதை உணர்ந்தான். இந்தச் சந்தடியில் அவனையுமறியாமல், குழந்தையைத் துளியி விருந்து எடுத்திருக்கிறான். இத்தனைச் சந்தடியிலும் அது தான் நிம்மதியாய்த் துரங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் சமையலறையில் முயற்குட்டிகள்போல் ஒரு மூலையில் குழுமுகிறார்கள். பாருவுக்கு உடலே வெட வ்ெட்வென உதறுகிறது.

அவன் தன்னிலிருந்து தான் பிரிவதையுணர்ந்தான். மனம் சுழலும் வேகத்தில் அவன் இருமைப்படுவதை அவன் உணரும் தெளிவில் ஒரு வேளை ஏற்கனவே குண்டு தன்மேல் விழுந்து, அவன் ஆவி உடலிலிருந்து பிரிந்து, ஆவி வேறு, உடல் வேறாய்த் தனிப்பட்டு விட்டானோ என்றுகூடச் சந்தேகம் தோன்றியது. ஆயினும் அவன் உடல், அவனிடம்,தானேயிருக்கிறது. அதுவும் உயிருடன்