பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியூகம் 8ණී

தானேயிருக்கிறது; ஆயினும் இப்பொழுது வாழ்வைச் சாவினின்று பிரிக்கும் நடுக்கோட்டில் தான் நிற்கையில் தன்னிலிருந்தும் தான் பிரிந்து தன்னையும் தன்னைச் சுற்றியவையையும் ஒரு தனி முறையில் சிந்திக்க முடிகிறது. கண்ணிற்குக் கலிக்கமிட்டாற்போல் தனக்கு நேர்ந் திருக்கும் புதுத் திருஷ்டியில், எல்லாமே ஒரு புதுத் தெளிவுடன் பிதுங்குகின்றன.

ஜன்னல் கம்பிகளின் வழி வெளித்தெரியும் வானத் திலும் ஒரு தெளிவு நிற்கிறது. வெள்ளி முளைத்தபின் தோன்றும் தெளிவு.

அவன் மனத்தை எந்தெந்த உணர்ச்சிகள் அலசு, கின்றன ? பயமா, துக்கமா, பரபரப்பா, சந்தேகமா? உணர்ச்சிகள் எல்லாமே இறந்து விட்டன. ஆனால் நினைவு செத்துவிடவில்லை. முன்னிலும் வேகமாகத்தான் வேலை செய்கிறது. எண்ணங்கள் வேகமாய்க் கடக்கையில் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற பழைய சம்பவங்கள் மனவிளிம்பில் திரிதிரியாய்ப் படருகின்றன.

ஒரு தோற்றம். நள்ளிரவில் இடி மின்னலுடன் மழை கொட்டுகிறது. நடுமுற்றத்தில் ஜலம் நிரம்பிக் கூடத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளைக் கூடத்தில் போட்டுக்கொண்டு அம்மா நடுவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். எல்லோருக்கும் போர்த்தியிருக் கிறாள். தானும் துப்பட்டி ஒன்றைப் போர்த்திக் கொண் டிருக்கிறாள். அவன் மாத்திரம் விழித்துக்கொண்டிருக் கிறான் என்று அவளுக்குத் தெரியும்போலும். அவன் கண்களில் மின்னல் பட்ாவண்ணம் அவள் கையால் அவன் முகத்தை மூடிக்கொண்டிருக்கிறாள். பயந்டுக்கம் கண்ட குரலில் அவள் ஏதோ மொண மொணக்கிறாள்.

அர்ச்சுனப் பல்குன கிரிடி பாசுபத...'

குண்டு விழுந்தாலும் இடிபோல்தான் இருக்குமோ? காட்சி கரைந்து இன்னொன்று உருவாகின்றது.