பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

溶6 லா. ச. ராமாமிருதம்

இப்பொழுது அவன் இரவில் வாசல் திண்ணையில், இfஇஇ) ஆட்டியவண்ணம் உட்கார்ந்திருக்கிறான் அவனுக்கு இச்சமயத்தில் வயது, பத்து, பன்னிரண்டு தானிருக்கும். அவன் கையில் ஒரு சின்ன சீசா நிறைய மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துப்போட்டு வைத்திருக் கின்றான். அவை மினுமினுக்கையில், ஆனந்தமான அவுட்டுச் சிரிப்பு அவன் வாயினின்று உதிர்கின்றது. மின் மினிகளின் ஒளி அவன் முகத்தை விட்டு விட்டு ஏற்று கின்றன. பால்வடியும் கன்னங்கள். கட்டை மயிர் முன்னெற்றியில் சரிந்து கண்ணைக் குத்துகிறது. ஆனால் அதையொதுக்கிக் கொள்ளவில்லை. தலையைத்தான் உதறிக் கொள்கிறான். அவன் கவனமெல்லாம் அவன் கையிலிருக்கும் சீசாவில் தான்......

இதற்குள் வெளியில் ஏதோ சப்தம். 'யாரங்கே, ஒதுங்கு” ‘'வேலைக்குப் போறேம்பா-' "ஏ நாட்டான், ஜப்பான் குண்டு மண்டையிலே வெடிக்கப்போவுது. ஒதுங்கு ஒதுங்கு-வேலைக்குப் போறானாம் வேலைக்கு :- -

போய்யா, நாஸ்தாகூடப் பண்ணாமே, காலங் கார்த்தாலே ஜப்பான்காரன் வந்துடறானோ ?-”

ஏ காட்டான், நீ ஒதை வாங்கப்போறே, ஒதுங்குன்னா ஒதுங்கு-”

'சாமந்திப் பூ !-சாமந்திப் பூ!!'ஒரு பூக்கூடைக்காரி ஒதுங்கிய இடத்திலிருந்தே கத்துகிறாள்.

இப்பெரும் நாடகத்தில் ஹாஸ்ய கட்டங்களும் உண்டு போலும் !

-இப்பொழுது அவன் ஒரு கூடத்தில் முன்னும் பின்னு மாய் உலாவிக்கொண்டிருக்கிறான். பாரு வாசலிலிருந்து கவலையுடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.