பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&8 லா, ச. ராமாமிருதம்

களை வாங்கிவந்தான். ஜன்னல்களிலும் கதவுகளிலும் ஜனங்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்குகின்றனர். வண்டி நகருகின்றது. ஒன்றையொன்று அடுத்து அடுத்து அவன் எ தி ரி ல் போய்க் கொண்டேயிருக்கின்றனர். வண்டித்தொடர் நடுமேட்டில் ஒரு திரு ப் பத் தி ல் பாம்பைப்போல் வளைந்து செல்கிறது.

இது எங்கே செல்கிறது ? இதிலிருக்கும் அத்தனை பேர்களும் எங்குச் செல்கின்றனர் ? எந்தச் சாவிற்குப் பயந்து செல்கின்றனர்? இப்பொழுது வரவிருந்த சாவுக்கா? இப்பொழுதில்லாவிடில் என்றேனும் இங்கு வரவிருக்கும் சாவுக்கா ? அல்லது இவர்கள் எல்லாம் போகுமிடத்தில் சாவே கிடையாதா ? .

சாவிற்கும் வாழ்விற்கும் இடையிலிருக்கும் நடுக்கோட்டி விருந்தால்தான் நி ம் ம தி . சாவினிடமிருந்து ஓடிக் கொண்டு அதை மறுப்பதைவிட அதன் அருகாமையில் இருந்து கொண்டு அதை அங்கீகரிப்பதே தேவலை, சாவைத் தேடிக் கொண்டு போக வேண்டாமேயொழிய அதன் அருகில் இருப்பதில் எவ்வளவோ அர்த்த மிருக்கிறது......

ஸ்டேஷனிலிருந்து சண்டைக்கு ஆள் சேர்க்கும் ஆபீளை நோக்கி நடந்தான்.