பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பிரிவு (?) பசாரம் ()

ஆஹ்-ஹா ஃபுல் ஹவுஸ் போல இருக்கே ஒரு ஆளுக்கு சீட்டு’ன்னா இத்தனை கூட்டம், இவ்வளவு ஆத்திரமா (சிரிப்பு) நம்ம கஸ்டமர் அத்தனை பேரும் திரண்டு வந்துட்டாஹ போலிருக்கே ! எல்லாம் காத்தய். யத் தேவர் ஏற்பாடு போலிருக்கு. கூட்டம் கூட்டிக் கும். மாளம் போடறதுலே அவருக்குத்தான் தனி குஷி, கலகலப் பான ஆசாமி. என்னதான் சீண்டுங்களேன் கோபமே வராது. மணல் பையாட்டம், எல்லோருடைய கோபம், ஆத்திரத்தையும், தாங்கிக்க அவர் மாதிரி ஆபீசிலே ஒரு ஆள் வேண்டியதுதான். ஃபேண்டா கான்ட்ராக்ட் அவரு டையதுதானோ ? ஆனால் எதிலேயும் அவர் லாபம் காணமாட்டார். கடைசியாகக் கணக்குப் பார்த்தால் அவர்தான் கோட்டை விட்டிருப்பாரு. காத்தய்யா ஏன் காத்திருக்கே? கார்க் அவுட் ஆவட்டுமே! போணி நான் பண்ணனும்னு பாக்கரெயா? எனக்கு வேணாம். மார்லே சளி. வயசாயுடுத்தில்லே அதனால்தானே என்னை அனுப்பறாஹ ! -

அக்கவுண்ட் சார், நீங்கள் என்ன மாதவியா? மாலைக் கென்ன அவசரம். ஆட்டுக்குப் பூட்டி அனுப்பறாப் போல அறுபதிலேதான்கள பலியா ச்சே அதன் கொண் டாட்டந்: தானே ஈதெல்லாம் முன்னாலேதானே மாலை ? பலியா னப்பறம் எதுக்கு ? பொறுங்கோ, பொறுங்கோ, நான் பேசி முடிச்ச பிறவு யோசிச்சுப் போடுங்கோ. யோசனை தானாவே வந்துடும். நான் எல்லோரையும் ஒருமுறை, யார் யார் இங்கே, என்ன என்ன, ஏன் ஏன்னு கண்டுக் கறேன். எல்லாத்துக்கும் ஏன் உண்டு, தெரியுமில்லே -

அட மாடச்சிகூட ஆஜரா? இன்னிக்கு நிச்சயமாக பாங்க் வாசலுக்குச் சாணி தெளிச்சிருப்பே. பெருக்கறது