பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 34

§ {} லா. ச. ராமாமிருதம்

மொத்தம் இருபதுநாள் தேறாட்டாலும் சம்பளம் முப்பது நாளைக்கு. கட்டை விரல் மை வைக்க சம்பளப் பட்டியல் தேதி மட்டும் உனக்கு முன்கூட்டி எப்படித் தெரியுது என் கையெழுத்து வேளைவரைக்கும் என் கண்ணிலேயே பட்டி யலைக் காட்ட றதில்லை. ஏன் நிக்கறே குந்து, குந்தம்ாட் டையா? சரி நில்லு,

இதென்ன வெள்ளிப் பெருச்சாளியா ? வாகனத்து மேலே உறை போட்டிருக்கு ஐய்யய்யோ ரேடியோவா ? ஆளுக்கொத்தரா என் பெருமை அவங்க பெருமை பேசி முடிச்சப்புறம் கைத்தட்டல் நடுவே காமரா க்ளிக் அடிக்க என் கையில் கொடுக்கத்தானே ! இது யார் சதி ? என்ன வேணும்னு என்னை முன்னால் கலக்கக் கூடாதா ?

எனக்கு உடனே தேவை கபக்கட்டுக்கு நாட்டு மருந்து. எங்களுக்கே சொந்தமா அம்மி, ஆட்டுக்கல், ஒரு கயிற்றுக் கட்டில், கீழே உட்கார்ந்து உறவு மனுஷாளுக்கும், எனக் கும்பணம் பாக்கிப்பட்டவங்களுக்கும் விழுந்து விழுந்து கடுதாசு எளுத ஒரு கணக்குப்பிள்ளை மேசை.

உங்களை இனிமேல் வாய்விட்டுக் கேட்க பண்டந் தானா இல்லை ?

ஐயா, வேண்டாததைத் தொண்டையிலே திணிக்கா திங்க. எனக்கு ரேடியோ வேணாம். என் வீட்டிலேயே நாலு இருக்கு கையிலே தூக்கிண்டு போற மாதிரி என் ஹிப்பி மவன்கள் போட்டா போட்டியிலே ஆளுக் கொண்ணு என் பணத்துலே தவணையிலே வாங்கி-இன் னும் தவணை தீரல்லே. ஆனால் எப்பவும் ஆன்’லேயே வெச்சிருக்காங்க. என் சம்சாரத்துக்குத் தனியா சமையல் மேடையிலே பாக்கட் சைசுல பாடிக்கிட்டேயிருக்கு. 'சிலோன்"னுக்குத்தான் குழம்பு கொதிக்குதாம். சிலோன் குழம்பு, அட என் எசமானியம்மா இங்கே எப்போ வந்தா?

ஆரம்பத்திலேயே, கூட்டம் வேண்டாம்னு சிப்பந்தி களை கெஞ்சிக் கேட்டுண்டேன். ஆனால் அவங்க கேக்