பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு (?) பசாரம் (!) § {

கல்லே. ஏசண்டுக்கு ஏசண்டு நாங்கள் இப்படித்தான் செஞ்சுகிட்டு புது யூனி பாரம் போட்டுக்கிட்டு போட்டோ எடுத்து வீட்டிலே மாட்டிக்கிட்டு இருக்கோம்.”

'அப்பா, நான் சூட்டுக் கோட்டுப் போட்ட ஏஜண்ட் இல்லையே ?” -

'நீங்கள் சொக்காயும் வேட்டியும்னா-அங்கவஸ்திரம் கூட இல்லே-நாங்கள் பாண்ட் போட்டுக்கல்லியா?”

அதற்கு மேல் அப்பீல் ஏது?

ஆகவே கூட்டத்தைக் கூம் டி இப்போ கோர்ட்டிலே நிக்கறோம்.

இந்த அம்மன் சன்னதி தெரு லாலாக் கடை அல்வாத் துண்டையும், நெய்க்கடலையும் தண்டனையாத் தின்னு அதன்மேல், இன்னும் பாலின் பச்சை வாசனைகூடப் போகாமல் பூபாலன் கடை அவசரக் காய்ச்சல் பெசல்" காப்பியையும் விட்டுண்டே ஆகணுமா? ஆனால் எல்லாம் பேச்சு முடிஞ்சப்புறம்தான், நான் சொல்லிட்டேன்.

இன்று நான் ஒரு தீர்மானத்தோடு வந்திருக்கிறேன். இன்று முழுக்க முழுக்க என் பேச்சுதான். மத்தவங்களுக்கு இடம் கொடுக்கப் போவதில்லை. ஒத்திகை ைவ த் துக் கொண்டு வந்திருக்கும் கனவான்கள், பேச்சாளர் அனைவரும் உங்கள் தயாரிப்புகளை, பாவம், நடிப்பு உள்பட மறந்து விடுங்கள். இதுவரை நான் விட்டுக் கொடுத்ததெல்லாம் போதும் இது என் நேரம் இதில் யாருக்கும் பங்கு விடப்போவதில்லை. நான் எல்லோ ரோடும் பேசப் போறேன். எல்லோருடேயும் ஒரே சமயத் தில், இருக்கற நேரத்தில் பேசறது முடியற காரியமில்லை ஒப்புக்கறேன். ஆனால் பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். தோளைத் தொட்டுப் பாக்கரவன் தொட்டுப் பார்த்துக்கட்டும். இந்த நாளுலே தொட்டாலே பெரிசு. நெஞ்சு சுட்டால் இந்த நாளில் அதுக்கென்ன. பேர்?