பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபிரிவு (?)பசாரம் (:) 貌器

'ஓவர் டைம்!” தோசையைத் திருப்பிப் போடு. மண் வளமோ, எண்ணெய் வளமோ, இந்த ஊரே தோசைக் குப் பேர் போனதாச்சே! அதுவும் செங்கோட்டைக் கல்லில் ஒரு சுத்து சுத்தினாலே, பிசுறில்லாமல் வட்டம் கல்லையடச்சுப் பட்டாபட்டமா அம்மையார் பாட்டி கதையிலே வருமே. எண்ணையே வேணாம். தண்ணிலேயே வார்க்கலாம், மெத்து மெத்துனு. எங்கேயோ ஆரம்பிச்சு, சுத்தி வளைச்சு எங்கேயோ வந்து ட்டேனா ? ஏன்? என்னென்னவோ பேசறோம்.தோசைக்கு இடமில்லாமல் போச்சா? வேளைக்கு நாலு அஞ்சு, ஒண்ணு சட்னி ஒண்னு சாம்பார், ஒண்ணு ஊறுகாய் வண்டல், ஒண்னு சுண்டக்கீரை, கடைசியில் மிளகாய்த்துள் மேலே ஆடைத் தயிர் அப்பவும் இலையை மடிக்க மனசில்லை.

அப்போ, அப்படியே நான் ஒட்டி, கொடுத்ததாலும் எச்-ஓ-விலிருந்து எனக்கு ஒலை விடறான்களே! என் அனுமதியில்லாமல் கொடுத்ததால் இந்தத் தடவை உம் சம்பளத்தில் பிடிப்பு அடுத்ததடவை நடவடிக்கை. அதை யும் நான் நடு ஹாலில் தான் தேங்காய் உடைக்கிறேன். எல்லாரும் கேட்க, எனக்குத்தான் வெட்கம், மானம், பொத்தி வைக்கிறது. ஒண்னும் கிடையாதே! ஆனால் அதுபற்றியும் நம் நண்பர்களுக்கு அக்கறை கிடையாது. 'பார்லிமெண்ட்டுவரை நீங்கள் தானே சார் (நீங்கள்னா நீங்களா, உங்கள் அதிகார வர்க்கம்) பதில் சொல்லனும்: எங்களுக்கு வேளைதான் கணக்கு வேளை எங்கள் பொறுப்பு.’

ஆகையால், கவலையாலேயே துரக்கங்கெட்டு, தந்தி தபாலும், தொலைபேசியும் சமாளிக்க முடியாமல், நடுராத்திரியில் டைப்ரைட்டருடனோ லக்கங்களுடனோ போராடிக் கொண்டிருக்கையில், எதுக்கேனும் வாச் மேனை கூப்பிடாமல் இருக்க முடியுமா? அநேகமாய் அவர் கூப்பிட்ட குரலுக்கு இருக்கமாட்டார்,சொல்லிக்கொண்டு போகும் கெட்ட பழக்கம் இருந்தால்தானே? கீழே கதவு