பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கட்டம் போட்ட சிவப்பு நிறப் புடவையைப் பின் புறக் கொசுவம் விட்டு உடுப்பேன். முழங்கை வரை இரவிக்கை அணிவேன். உட்கழுத்து அய் டிகை, திருமங்கலியம் கோத்த சாடு எப்போதும் க்ழுத்தில் இருக்கச் செய்வேன். கைகளில் பட்டைப் பொன் கிாப்பணிவேன். கால் விரல்களில் இரட்டை மிஞ்சில் ள் அணிந்து அவை ஒசையிட நடப்பேன்.

அரவினையார்: எனக்கு ஐம்பத்திரண்டு அகவையா கின்றது. வடமொழி மறை,மந்திரங்களில் தேர்ந் த ன் சடங்காற்றுதல் என் குலத் தொழில். உச் சியில் குடுமி வைத்து முடிந்து விட்டுக் கொள்வேன், நெற்றில் முப்பட்டைத் திருநீறணிந்து அதன்மேல் கைக் கட்டை விரலால் சத்தனத்தைக் கொண்டு திருநாமம் போல் இட்டுக் கொள்வேன். மார்பில் முப்புரி நூல் அணிவேன். மார்பும் கைகளும் நிறையச் சந்தனம் பூசுவேன். கழுத்தில் ஒரு அக்கமணி அணிவேன். சேலம் குண்டஞ்சி ஆடையை ஐந்து கச்சமாக உடுப்பேன். ஆறு முழமுள்ள மேலாடையை இடுப்பைச் சுற்றி முடிச் சிட்டுக் கொள்வேன். கையில் எப்போதும் தருப் பைப் புல்லைக் கொள்வேன். மரத்தால்ாகிய காலடிக் குறடு அணிந்து நடப்பேன்.

கிறைமதி : பதினெட்டு அகவை யடைந்த நான் இரட்டைப் பின்னலாகக் கூந்தலத் தொங்க விடு வேன். தற்கால நாகரீகப் பூச்சுக்கள், ஒப்பனைகள் எனக்கு விருப்பமானவை, காதில் புதுமைத் தோடணிந்து, முத்துக்குழை அணிவேன். இளம் பச்சை நிறப் பட்டுப் பாவாடையும், அதே நிற மேற்சட்டையும் அணிந்து, சிவப்பு நிற மேலாடை உடுப்பேன். நீண்டு தொங்கும் பொன் சங்கிலி