பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 47

வியா : ஆமாம் சோதிடப்படியா ? சனி : செவ்வாய்க் களங்கம் என்ன செய்யும் ? வியா : ஒ செவ்வாய்க் களங்க்மா ? சனி : மணவறையில் சாகடிக்கும் அவனை. வியா : அடே மாப்பிள்ளை அப்போது என் பெண் தாலி

அறுக்குமேடா ! சனி : அறுந்த தாலியைக் கட்டத் தான் நான் இருக்

கிறேனே மாமா ? - வியா : அப்புறம் உன் கதி ? - சனி : களங்கம் ஒரு உயிரோடு கழிந்து விடும் மாமா? வியா : அப்படியா? ஆமாமடா மாப்பிள்ளை ! தாலி யறுந்த பெண்ணை ம்றுபடியும் திருமணம் செய்து கொள்வது நம் குடும்பப் பழக்க மில்லையே? சனி : ஆமாம் மாமா மணவறையிலே மாப்பிள்ளை

சாவது மட்டும் உங்கள் குடும்பப் பழக்கமா மாமா ? வியா ; இ.இ. அதுவும் சரிதான். அப்படியா

குல் அப்படியே ஏற்பாடு செய்யட்டுமா ? சனி செய்யட்டுமாவாவது ? செய்து விட்டேன் என்று சொல்லுங்கள் மாமா. போங்கள். (போகிருர்) தனக்குள்) அப்பா, பகுதியளவு தப்பித்துக் கொண் டேன். ஒரு நாள் விருந்தோம்பலே இந்த வீட்டு வேலைக்காரளுகக்கூட இருக்காதே’ என்கிறது. மாப்பிள்ளை ஆகிவிட்டால் 1 ஐயோ போதும் ! ஆஞ்சநேய பகவானே இல்லை...இல்லை...ஏ, கதிரவ பகவானே நீதான் காப்பாற்ற வேண்டும்.

(-திரை விழுகிறது-)