பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

வியா : அப்படிச்சொல். குடும்பம் என்ருல் இப்படி யல்லவா இருக்க வேண்டும், ஒரே ஒற்றுமையாக. சரி, சரி திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடெல் லாம் கவனி. மாப்பிள்ளைக்கு என்ன துணி வேண்டும் என்று கேள். -- செவ் : நான் கேட்பதா? நீங்களே கேட்டு விடுங்

களேன். * * வியா : நான் தான் அவளுேடு பேசுவது இல்லையே. கிறை : ஆமாம். அப்பா யாரைச் சொல்லுகிருர்கள் அம்மா? - -- - செவ் , அதுதானடி எனக்கும் புரியவில்லை. வியா , யாரைச் சொல்லுவேன் செவ்வாயி ! உன் அண்ணன் மகன், என் ஆசை மருமகனைத்தான் சொல்கிறேன். - - செவி : என்னது? அப்படி யெல்லாம் சொல்லா நீர் கள். உங்கள் அவரப்படி உங்கள் அக்காள் மக னுக்கே திருமணத்தை முடியுங்கள். கிறை : ஆமாம் அப்பா, எனக்கும் அதுதான் அப்பா எண்ணம். இந்த அத்தான் தான் பிழைப்புக்கு ஒன்றும் வழியில்லாமல் இருக்கிருர். அவராவது சோதிடத்தில் நிறையச் சம்பாதிக்கிரு.ர். சாத்தி ரங்களை எல்லாம் படித்த அறிவாளியாக இருக் கிரு.ர். அவருக்கே ஏற்பாடு செய்யுங்கள். வியா : நீ பேசாமல் இரு அம்மா! நீ சின்னப் பிள்ளை, உனக்கு ஒன்றும் தெரியாது. நானும் அவனைப் பற்றி என்னவோ பெரிதாய் நினைத்துக்கொண்டு இருந்தேன். நான்கு காசு சேர்த்து வைத்திருப் பான் என்று நினைத்தால், வெறும் பயல். பிழைப் பும் மதிப்பான பிழைப்பில்லை. என் மதிப்புக்கு ஒரு

ந. நா. 4