பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மறதி மன்னன்

மறதி யுடையார்க்குப் புகழ் பொருந்திய வாழ்க்கை இல்லை என்றுரைத்த திருவள்ளுவர்,

இக்கருத்து உலகத்தில் எத்தகைய நூலினர்க், கும் முடிந்த முடிபானது, என்று முடித்தார். இப் பொல்லாங்கான மறதி முள்மரம் போன்ற பகை யாகும். இளமையிலேயே இம்முள்ளேக் கிள்ள வேண்டும். வளர விட்டால் தளர்வே வரும். இதனை நகைச்சுவை மெருகோடு தரும் நாடகம்.