பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நகைச்சுஆை

பெரு என்ன... உயிரா. யார். உன் உயிரையா, சொல்கிருய். -- - கண : என் உயிர் கிடக்கட்டும். அது போவதைப்பற்றி யார் கவலைப்படுவார் ? தங்களது மேன்மைதங்கிய உயிரன்ருே பெரிது. - - " பெரு : (பதற்றத்தோடு) என்னப்பா...என் உயிரா.

என்ன... என்ன... சொல்லப்பா ? - கண : ஒகோ. நேற்று வழக்கு முடிவு கூறும்போது உங்கள் முன்னே வந்து விழுந்தவற்றை யெல்லாம் மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது. வழக்குப் பிரிவு 356 முதல் குற்றவாளி மொண மொணத்தது. அந்தக் கட்டைப் பயல் முறைத்துப் பார்த்தது. குற்றவாளிகளின் மாமன், மைத்துனன், அண் ணன், தம்பி இவர்களெல்லாம் வெளியே நின்று பேசிக் கொண்டது. இவற்றை யெல்லாம் மறந்தே விட்டீர்கள் போல் இருக்கிறது. பெரு : ஆமாமப்பா. மறந்தே போனேன். இப்போது . தான் நினைவு வருகிறது. உ.ம்... இதற்கெல்லாம் மனத்தைத்தேளரவிடக்கூடாது. இப்படி யெல்லாம் ஏதாவது வரும் என்றுதானே கைத்துப்பாக்கி வைத் திருக்கிறேன். மேலும் எனக்கு அந்த ஆபத்துச் சகாயத்தின் நட்பும் உண்டு. அவன் சரியான ஆள் கட்டுள்ள உடம்பு,... அவன் துணை... எனக்கு எஃகுக் கோட்டைப் போன்றது. தெரியுமா உனக்கு!

(ஆமை உள்ளே வருகிருன்) . . . . . . . . கண நானும் மறந்தே போனேன். அந்த ஆபத்துச் சகாயம் காலையிலே வழக்கு மன்றம் துவங்குவதற்கு முன்னலே வந்தான். இப்போது ஐயாவை பார்க்க முடியாது என்று சொன்னேன். அவன் போயிருப் பான் ஐயா. -