பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

நடந்து கொண்டே இரு!



கூவட்டும்

துன்பத்தின்-துரோகத்தின் ருசியால் இன்று சூடுற்ற தலைமுறையின் சிந்த னையில் முன்பிருந்த மெதுப்போக்கு இல்லை யேனும் மூளியுற்ற நட்பாலே பயன்தான் ஏது? தன்காலை வலுவாக ஊன்றிக் கொண்டால் தடுமாறத் தள்ளாடத் தேவை இல்லை! அன்பொன்றை அறமொன்றே ஆன்மா வாக ஆகிவிட்ட நமக்கெதற்கு கிழட்டு நேசம்?

வெள்ளையரின் விலங்கொடித்து உரிமை பெற்று
வேகமுற முன்னேறும் பாரதத்தை முள்விதைத்துத் தடுக்கின்ற குரங்கு புத்தி மூதறிஞப் பெரியவர்கள் திருவாய் மலர்ந்தே 'சொள்ளை இது.சொத்தைஅது.என்றே துணிந்து
சுதந்திரமாய் உளறுகின்ற கொடுமை வேறு உள்நாட்டில் அரசுக்கே நாளும் நாளும்
ஓயாத தொல்லையென தடித்துப் போச்சு'.