பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்

8

 பொய்கொல்லப் பொய்ஏவி விடவா வேண்டும்?
புவிநெடுகில் அரசிடத்தும் மகிக ளிடத்தும் மெய்யான நம்நிலையைப் பிரச்சனைகள் மிகுகின்ற சிக்கல்களை உரித்துக் காட்டிச் செய்முறையில் கருத்தோட்டப்போக்கில் மேலைச்
சிந்தனையில், தார்மீக அன்பை நம்பால் பெய்திடவே வைப்பதுதான் பார தத்தின் பிற்கால வெற்றிக்கே அடிக்கல் லாகும்.

'நள்ளிரவில் வையகமே உறங்கும் போது நாம்விழித்தே எழுகின்றோம்'என்றே அந்நாள் துள்ளுகின்ற பூரிப்பில் கனவு கொஞ்சச் சொன்னானே நேருபிரான்.ஆனால், ஆனால் மெல்லமெல்ல அதுமாறி வையம் விழிக்கும் வேளையிலே கொட்டாவி விட்டால், நம்மை எள்ளுகின்ற புல்லர்களின் நாவில், நாமே இனிப்பெடுத்துத் தடவுவதாய் ஆகி டாதா?

'சீலமுறு உண்மையுமே காலத் தாயின் செல்வமகள்' என்பார்கள்! எதிரிகள் வரவிருந்தும் இடமெல்லாம் உண்மைப் பெண்ணின்
வாழ்வுக்கும் கற்புக்கும் ஆபத் தேயாம். ஞாலத்தில் எதிரொலிக்கும் 'கொள்ளி நாக்கு'
கோலமிடும் பண்பாய 'இனியநாக்குக்
குயில்'களெல்லாம் கூவட்டும் திசைய னைத்தும்!